நடிகர் நெப்போலியான இது.! சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க.! பாத்தா நம்பமாடீங்க.!

0
6629
nepolean
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகர் நெப்போலியன். 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார்.

-விளம்பரம்-

திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 1991ல் பாரதிராஜவால் புது ‘நெல்லு புது நாத்து’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின்னர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார் நெப்போலியன்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்த மூன்று போட்டியாளர்கள்.! செத்தார் கவின்.!

- Advertisement -

இவருக்கு ஜெயசுதா நெப்போலியன் என்ற மனைவியும், தனுஷ் நெப்போலியன் மற்றும் குனால் நெப்போலியன் என்ற மகன்களும் உள்ளனர். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். ஏனெனில் அவருடைய மூத்த தனுஷ் நெப்போலியனுக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளது.

இதனால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும், நெப்போலியன் ‘கிறித்துமஸ் கூப்பன் ‘ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். டேனியல் இயக்கியுள்ள இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா மோனின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார்.

-விளம்பரம்-

நெப்போலியனுக்கு இந்து இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நெப்போலியன், இந்த கிறிஸ்த்மஸ் கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதல் ஹாலிவுட் படத்தில் ஹீரோயினுடன் நடிக்கவில்லை. ஆனால் இந்தப் படத்தில் ஹீரோயினுடன் நடித்திருக்கிறேன். அடுத்த படத்தில் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை என்று கூறியுள்ளார்.  இந்த நிலையில் நடிகர் நெப்போலியனின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement