அது மொதல்லே தெரிஞ்சி இருந்தா நான் அப்படி பண்ணி இருக்கவே மாட்டேன் – மாஸ்டர் படத்தால் தனக்கு நேர்ந்த ஏமாற்றம் குறித்து சாந்தனு.

0
649
- Advertisement -

விஜய்யின் மாஸ்டர் படத்தால் நான் நிறைய வேதனைகளை அனுபவித்திருக்கிறேன் என்று நடிகர் சாந்தனு அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் பாக்யராஜ்-பூர்ணிமா ஆகியோரின் மகன் ஆவார். இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவரால் தன் தந்தையை போல் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்க முடியவில்லை. பின் நடிகர் சாந்தனு அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

மாஸ்டர் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சாந்தனு நடித்த கடைசி படம்:

அதற்குப்பின் இவர் ஸ்ரீஜர் இயக்கத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அதுல்யா ரவி, பாக்கியராஜ், ஊர்வசி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இதற்கு பிறகு சாந்தனு படம் குறித்து எந்த ஓரு தகவலும் வெளியாகவில்லை. அதோடு மாஸ்டர் படம் வெளியாகும் போது சாந்தனு பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

சாந்தனு அளித்த பேட்டி:

ஆனால், படம் வெளியான பிறகு அவருடைய காட்சிகள் குறைவாக இருந்ததால் நெட்டிசன்கள் பலம் அவரை விமர்சித்து இருந்தார்கள். அதற்கு பிறகு சாந்தனும் பெரியதாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சாந்தனு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தான் மாஸ்டர் படத்தில் பட்ட கஷ்டங்கள் குறித்து கூறியிருந்தது, நான் மாஸ்டர் படத்திற்கு 30 நாள் சூட்டிங் சென்றேன். எனக்கு தனியாக சண்டைக்காட்சி, பாட்டு எல்லாம் எடுத்தார்கள்.

மாஸ்டர் படம் குறித்து சொன்னது:

விஜய் அண்ணாவுடன் ஒரு சண்டைக் காட்சியிலும் நான் நடித்தேன். இந்த படத்தில் நடித்தால் எனக்கு 40 நிமிடம் படத்தின் ஸ்க்ரீன் டைம் இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் தற்போது இளம் தலைமுறைகள் மத்தியிலும் நான் பாப்புலர் ஆகுவேன் என நினைத்தேன். ஆனால், படம் பார்க்கும் போது தான் என்னுடைய காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டார்கள். வெறும் 12 நிமிடம் மட்டுமே திரையில் இருக்கிறேன். அது தெரிந்திருந்தால் நான் அப்படி பேட்டியை கொடுத்திருக்க மாட்டேன் என்று சாந்தனு கூறியிருக்கிறார்

Advertisement