தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காதது குறித்து இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். மேலும், இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம்.
ஏன்னா, அந்த அளவிற்கு இவர் தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். இவர் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.
இளையராஜா குறித்த தகவல்கள்:
மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவர் பல விருதுகளை பெற்று இருக்கிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக இருக்கிறார். அதேபோல் இவருடைய ஒட்டு மொத்த குடும்பமும் இசையை சார்ந்தவர்கள். இவருடைய அண்ணன் கங்கை அமரன் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர். இவருடைய பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி ஆகியோரம் மிக சிறந்த பாடகர்கள்.
கார்த்திக் ராஜா குறித்த தகவல்:
தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதேபோல் கார்த்திக் ராஜாவும் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் தான். இவர் பாண்டியன் என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின் இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
கார்த்திக் ராஜா அளித்த பேட்டி:
இருந்தாலும், தன் தந்தை, தன்னுடைய தம்பி போல் இவரால் சினிமாவில் நிலைத்து கொடிகட்டி பறக்க முடியவில்லை.இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் கார்த்திக் ராஜா பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம் செய்தியாளர்கள் உங்களுக்கு சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட எனக்கு எந்த இடம் தேவையோ அதை கடவுள் சரியாக கொடுத்திருக்கிறார்.
எனக்கான நேரம் வரும் :
எனக்கு தேவையானவற்றை எல்லாமே அவர் செய்து விடுவார். ஒருவேளை நான் மிக பிரபலமான நபராக இருந்தால் திமிரு அதிகமாகிவிடும். அதனால்தான் ஆண்டவன் என்னை இந்த இடத்தில் வைத்திருக்கிறார். நான் இப்போது இருக்கும் இடத்தை நினைத்து என்றும் வருத்தப்பட்டது கிடையாது. எனக்கான நேரம் வரும் அதுவரை காத்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.