திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, அதற்க்கு காரணம் இது தான் – முதன் முறையாக சொன்ன சாந்தனு.

0
429
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனுவும் ஒருவர். இவரது தந்தை பாக்கியராஜால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவரால் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்தது. இறுதியாக இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வந்தனர். அதற்கு பதில் கொடுத்த சாந்தனு, எத்தனை நிமிடங்கள் வருகிறோம் என்பது முக்கியமில்லை. விஜய் போன்ற ஸ்டார் படத்தில் ஒரு நிமிடம் நடித்தாலே எனக்கு போதும் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

அதே போல தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அவர்களிடம் கொச்சையாக பேசாமல் மிகவும் தன்மையாகவே பதில் அளிப்பார் சாந்தனு. பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து வந்தாலும் ஒரு வெற்றி படத்திற்காக போராடி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் முதல் வெற்றியை பெற்று இருக்கிறார் சாந்தனு. சாந்தனு பிரபல தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015ல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணத்தை நடிகர் விஜய் நடத்தி வைத்து குறிப்பிடத்தக்கது, இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை. இதனால் பல விமர்சங்களை சந்தித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாந்தனு மற்றும் கீர்த்தி, குழந்தை பெற்றுக்கொள்ளாததால் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஓப்பனாக பேசியுள்ளனர்.

-விளம்பரம்-

அதில் , “நாங்கள் திருமணத்திற்கு சென்றாலே குழந்தை எப்போன்னு கேட்டு டார்ச்சர் செய்வாங்க. நாங்கள் இப்போது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் குழந்தையை பெத்துக்க கூடாது என்று முடிவு செய்யவில்லை. எது வர வேண்டுமோ அது சரியான நேரத்தில் வரும்” என்று மனம் திறந்தனர். சமீபத்தில் ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழாவில் பேசிய சாந்தனு ‘ இதுதான் எனக்கு முதல் வெற்றி இந்த வெற்றி கிடைக்க எனக்கு பல வருடங்கள் ஆகிவிட்டது.

என் அம்மா என்னிடம் சொல்லி இருக்கிறார் என்னுடைய தந்தை அவரிடம் நான் எத்தனையோ நபர்களை உருவாக்கி இருக்கிறேன் எத்தனையோ நடிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறேன் ஆனால் என் மகனுக்கு ஒரு வெற்றியை என்னால் கொடுக்க முடியவில்லை என்று கண்ணீர் விட்டு இருக்கிறார் இப்போது நான் யோசித்தேன் நான் மாபெரும் நடிகனாக வேண்டும் என்று கூட வேண்டாம் ஒரே ஒரு வெற்றியை கொடுத்தால் போதும் என்று நினைத்தேன் தற்போது ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் என் தந்தையின் கண்ணீரை துடைத்துள்ளேன்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement