ஒரு வழியா சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்காத காரணத்தை ஓப்பனாக கூறிய நடிகர் சாந்தனு. வீடியோ.

0
2771
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இயக்குனர், நடிகரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான் சாந்தனு. இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஆயிரம்விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் சாந்தனு அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, சினிமா உலகில் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். சொல்லப்போனால் முதலில் என்னுடைய படங்கள் பிளாக்பஸ்டர் அடித்து இருந்தால் நான் தலை கால் புரியாம ஆடி இருப்பேன். நிறைய விஷயம் தெரிந்து இருக்க மாட்டேன். கொஞ்சம் அடி பட்டால் பின்னால் தான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அதனால் நான் யார் யாரு எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டேன்.

- Advertisement -

அப்போது தொகுப்பாளர் அப்படி என்ன உங்கள் வாழ்க்கையில் அடிபட்டு தெரிஞ்சுகிட்டிங்க, என்று கேட்டார். அதற்கு சாந்தனு ஆரம்பத்தில் நான் சினிமாவில் நடிக்க வரும்போது தமிழ்நாட்டோட ஷாருக்கான் நீங்க தான், அடுத்த சார்கான் என்று தான் பேசுவாங்க. அப்பல்லாம் நான் பயங்கரமா வேற மாதிரி யோசித்திருந்தேன். ஆனா, இப்ப எனக்கு நினைச்சு எனக்கு சிரிப்பா இருக்கு. இப்படியெல்லாமா நம்மள உசுப்பேத்தி விட்டார்களே என்று வேதனை பட்டு உள்ளேன். அப்ப எனக்கு 19 வயசு தான் இருக்கும். அந்த அளவுக்கு எனக்கு விவரம் தெரியாது, ரொம்ப அமைதியா இருப்பேன் என்று கூறினார்.

தொகுப்பாளர் சுப்ரமணியபுரம் படம் விலகல் குறித்து கேட்டார். அதற்கு சாந்தனு கூறியது, சுப்ரமணியபுரம் படத்தில் நான் நடிக்க முடியமால் போனதற்கு காரணம், என் அப்பா ரெண்டு விஷயத்தை யோசித்துப் பார்த்தார். ஒன்று நான் அப்ப தாணு இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து இருந்தேன். அப்ப சுப்ரமணியபுரம் படத்தில் கமிட்டாகி அந்த படம் நான் நடிக்கும் படத்திற்கு முன் வந்தால் தாணு அவர்களுக்கு பிரச்சனை. இரண்டாவது சுப்ரமணியபுரம் படத்தின் தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்கிறார். அதனால என் அப்பா முதலில் தாணு மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இடம் ஆலோசனை செய்து விட்டு கூறுகிறேன் என்று சொன்னார். பின் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இடம் பேசலாம் என்று போகும் போதெல்லாம் தள்ளித் தள்ளிப் போயிட்டே இருந்தது. பின்னர் சுப்ரமணியபுரம் படத்தின் இயக்குனர் வேற ஒரு நடிகரை வைத்து படம் எடுத்து விட்டார் என்று கூறினார்.

-விளம்பரம்-

நடிகர் சாந்தனு, இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். இது பலருக்கும் தெரிந்ததே. தளபதி விஜய்யின் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். நடிகர் சாந்தனு இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளிவந்து. இவர்களுடன் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சஞ்சீவ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து உள்ளார்கள்.

Advertisement