பிகிளுக்காக வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட நடிகர். வச்சி செய்யும் அஜித் ரசிகர்கள்.

0
125288
Vijay-ajith
- Advertisement -

தமிழகே பல எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டிருந்த பிகில் படம் திரையரங்குகளில் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . மேலும்,விஜய் ரசிகர்கள் பயங்கர ஆர்பாட்டத்திலும், உற்சாகத்திலும் தியேட்டர்களில் பட்டைய கிளப்புகிறார்கள். இதனைத்தொடர்ந்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. பிகில் படம் 180 கோடி ரூபாய்க்கு மேல் தயாராகி இருக்கும் படம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், ரசிகர்கள் பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்ட பிகில் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜயின் பிகில் படம் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே திரைக்கு வரும் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் இன்று பிகில் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக வெளிவந்து உலகமே கலகட்டியது. இன்று பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிகில் படம் குறித்து கருத்துகளை பதிவிட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும்,நம்ம தளபதி அவர்கள் இந்த தீபாவளிக்கு சரவெடிய போட்டு ரசிகர்களை வெறித்தனமாகி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

இதையும் பாருங்க : லாஸ்லியாவை சந்திக்க இலங்கை செல்லும் போட்டியாளர். யாருனு பாருங்க.

- Advertisement -

விஜய்யின் பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றது. இந்நிலையில் பிகில் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை ரசிகர்கள் இணையங்களில் தந்து வருகின்றனர். எப்பவுமே விஜய் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி வரை சமூக வலைத்தளங்களில் பிரச்சனைகள் தொடங்குவது வழக்கம் தான். அந்த மாதிரி இந்த முறையும் பிகில் படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்து இருந்தது. இதனைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் சில பேர் பிகில் படத்தின் காட்சிகள் இணையதளத்தில் கசிந்ததை பார்த்தார்கள். மேலும், அவர்கள் “#BigilDisaster” என்ற ஹாஸ்டாக் ஒன்றை இணையங்களில் உருவாக்கி வருகின்றனர். அதோடு இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி கொண்டு வருகின்றது. மேலும், இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பயங்கர கடுப்பாகி விட்டார்கள் என்று சொல்லலாம்.

மேலும், விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு பாக்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “டேய் நிறுத்துடா, போதும் போதும். நீங்கள் யாரை நேசித்து இப்படி செய்கிர்களோ? அவர்கள் பெயரை நீங்களே கெடுக்காதீர்கள். நீங்கள் யாரை குறிப்பிட்டு இப்படி சொல்றீங்களோ? அவர்கள் உங்களை இக்நோர் தான் செய்யப் போகிறார் என்றும் உங்கள் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என்றும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் இதை பார்த்துட்டு சும்மா விடுவாங்களா? இஸ்டம் மேனிக்கு சாந்தனு பாக்யராஜ வெச்சி செஞ்சுட்டாங்க. விஜய்க்கு எதிராக விமர்சிப்பவர்களை கேள்வி கேட்கும் சாந்தனுவை இணையங்களில் எதிர்மறையாகப் பேசி அழைத்தார்கள். இப்படி விஜய் படத்தை விமர்சித்தால் யார் தான் சும்மா இருப்பார்கள்? என தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

-விளம்பரம்-

மேலும்,இந்நிலையில் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு அஜித் ரசிகர்கள் “நேர்கொண்ட பார்வை” படம் வரும்போது விஜய் ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்துக் கொண்டு இருக்கும் போது நீ என்க போன?தூங்கிட்டு இருந்தியா? என்ன பண்ணிட்டு இருந்த ? உங்கள சொல்லும்போது மட்டும் கோவம் வருதா என்று தாறுமாறாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு பண்ணி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். அஜித்-விஜய் நடிகர்கள் சும்மா இருந்தாலும் இந்த ரசிகர்கள் பண்ணும் அட்ராசிட்டி அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement