5 வருஷமா அதிமுக ஆட்சின்னு சும்மா இருந்தீங்கள – தனது தோழி பிரச்சனை குறித்து கேள்விக்கு ஷாலு சம்மு பதில்.

0
90973
shalu
- Advertisement -

தன்னை முன்னாள் அமைச்சர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி தற்போது தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக நாடோடிகள் பட நடிகை ஷாந்தினி தேவா கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடோடிகள் படத்தில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் காதல் ஜோடியாக நடித்தவர் சாந்தினி. மலேசியாவை சேர்ந்த இவர் சென்னையில் தான் தங்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் முன்னால் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

-விளம்பரம்-

மணிகண்டன் தன்னை காதலித்ததாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் சாந்தினி கூறியிருந்தார் மேலும் ஐந்து வருடங்களாக மணிகண்டன் வாழ்ந்துவந்த தான் அவரால் மூன்று முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும் சாந்தினி கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : இத்தனை வருஷம் காதலித்தேன், ஆனா இப்போ நான் சிங்கிள் இல்ல – லட்சுமி மேனன்

- Advertisement -

ஆனால், இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதோடு தன்னுடைய ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும் சாந்தினி கூறியிருந்தார். ஆனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனோ, சாந்தினியை தனக்கு யார் என்றே தெரியாது அவரை வைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தண்னிடம் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வதாக கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை ஷாலு சம்மு இந்த விவாகரத்தில் யாருக்கு நியாயம் கிடைக்கும் என்று கேட்டு இருக்கிறார். நடிகை ஷாலு ஷம்முவும், சாந்தினியும் நெருங்கிய தோழிகள் என்பது கூறிப்படதக்கது. இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் ஷாலு ஷம்முவிடம், இப்ப ஏன் இந்த பிரச்சினையை கொண்டு வராங்க 5 வருஷம் அதிமுக ஆட்சின்னு பயமா என்று கமெண்ட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பதிலளித்த ஷாலு ஷம்மு ‘யாருக்கும் யாரைப் பார்த்தும் பயப்படனும்னு யாருக்கும் அவசியமில்லை. அதேபோல இப்போ புகார் கொடுத்ததும் யாருடைய தூண்டுதலால் கிடையாது. அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ அது எல்லாம் எங்களுக்கு பிரச்சினை கிடையாது’ என்று பதில் அளித்துள்ள ஷாலு ஷம்மு.

Advertisement