‘இனி இவருக்கு பதில் இவர்’ நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை.

0
843
Sherin
- Advertisement -

நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இருந்து நடிகை விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள்.

-விளம்பரம்-

அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை பார்க்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : ஹீரோவானார் குக்கு வித் கோமாளி ரக்ஷன் – அட, கூட இந்த விஜய் டிவி பிரபலம் நடிக்கிறாராம்.

நம்ம வீட்டு பொண்ணு சீரியல்:

இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் புதுபுது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் கொடுத்து வரும் சீரியல் நம்ம வீட்டு பொண்ணு. இந்த தொடர் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப் பட்டது.

-விளம்பரம்-

கார்த்திக் மற்றும் மீனாட்சி ரோல்:

இந்த தொடர் ஜல்சா என்ற வங்காள மொழி தொடரின் மறுஆக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அக்ரிமெண்ட் முறையில் திருமண பந்தத்தில் இணையும் கார்த்திக் மற்றும் மீனாட்சியை சுற்றித் தான் மொத்த கதையும் நடக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

சீரியலின் கதை:

டாம் அண்ட் ஜெர்ரி போல மீனாட்சியும் கார்த்திக்கும் அடித்துக்கொள்ளும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவருமே இந்த சீரியலின் மூலம் புதுமுக நடிகர்களாக அறிமுகமாகியிருந்தாலும் தற்போது இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறது. தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.

சீரியலில் விலகிய நடிகை:

இந்நிலையில் நம்ம வீட்டு பொண்ணு தொடரிலிருந்து நடிகை விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த தொடரில் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த ஷெரின் திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது அவருக்கு பதிலாக லைலா என்பவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியல் இருந்து ஷெரின் விலகியதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Advertisement