மகனின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார்.! ஷோபி மாஸ்டர் சொன்ன சீக்ரட்.!

0
2697
Shobi

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி.

Image result for shobi master and vijay

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரபட்டாளங்களும் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதையும் பாருங்க : மகளை விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற காரணத்தை கூறிய சாண்டியின் மனைவி.! 

இந்த நிலையில் பிகில் படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அதற்கு முக்கிய கரணமே சமீபத்தில் சஞ்சீவ் மைக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யின் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வரும் ஷோபி விஜய் மகன் குறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷோபி பேசுகையில் பிகில் படப்பிடிப்பின் உங்கள் மகன் இயக்கிய குறும்படம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன் .அதற்கு விஜய் சிரித்துக்கொண்டே பையன்  வளர்ந்து விட்டான். அவனுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும். அவனுடைய விருப்பத்தின்படி கனவை நிறைவேற்றிக் கொள்ளட்டும் என்று சொன்னதாக ஷோபி கூறியுள்ளார்.