ஜோதிகாவோட அந்த ஒரு சீன் மொத்த படத்தையும் கெடுத்துடுச்சு – ஜில்லுனு ஒரு காதல் இயக்குனர்.

0
284
- Advertisement -

ஜோதிகாவோட அந்த ஒரு சீன் படத்தையே கெடுத்துவிட்டது என்று ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சூர்யா நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம் ஜில்லுனு ஒரு காதல்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் இன்று ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர் கிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் ஜோதிகா உடைய சீன் குறித்து கூறியிருந்தது, இந்த படத்தில் சூர்யா ஐசுவை மீட் பண்ணும் மாதிரி ஒரு காட்சி வரும்.

- Advertisement -

ஜில்லுனு ஒரு காதல் படம்:

அப்போது குந்தவி உள்ளே இருப்பார். சூர்யாவிற்கு தெரியாமல் சர்ப்ரைஸாக குந்தவி தான் இந்த ஏற்பாடு செய்திருப்பார். உடனே சூர்யா, குந்தவியிடம் சென்று என்னுடைய நண்பர் என்றெல்லாம் சொல்லி சமாளிப்பார். அப்போது குந்தவி, எனக்கு எல்லாம் தெரியும். நான் உன்னை காதலிக்கிறேன். உன்னுடைய எமோஷனல் கூட எனக்கு ரொம்ப முக்கியம் என்று அழுது கொண்டே பேசி இருப்பார். ஜோதிகா அந்த அளவிற்கு ரொம்ப எமோஷனலாக அந்த காட்சியில் நடித்திருப்பார்.

இயக்குனர் பேட்டி:

அவர் நடித்து முடித்த உடனே செட்டே பயங்கரமாக கிளாப்ஸ், விசில் எல்லாம் அடித்திருந்தார்கள். எனக்கும் பிடித்திருந்தது. ஆனால், நான் இன்னொரு டேக் போகலாம் என்று சொன்னவுடன் ஜோதிகா பிடிக்கவில்லையா ஏன் என்று கேட்டார். இல்லை நன்றாக தான் இருக்கிறது. ஆனால், இன்னொரு டேக் போகலாம் என்று சொன்னேன். நான் நடிக்கிறேன். என்ன காரணம் என்று சொல்லுங்கள் என்று ஜோதிகா கேட்கிறார்.

-விளம்பரம்-

ஜோதிகா வைத்து எடுத்த சீன்:

அதற்கு நான், தன்னுடைய முன்னாள் காதலி உடன் இரு என்று ஒரு மனைவி அழுது கொண்டு தன்னுடைய குழந்தையை தூக்கி கொண்டு செல்லும் போது எந்த கணவனாலும் மன நிம்மதியாக இருக்க முடியாது. அதற்காக தான் அழாமல் அந்த காட்சியில் நடித்துக் காட்டுங்கள் என்று சொன்னேன். ஜோதிகாவும் அதே போல் நடித்தார். ஆனால், பலருமே அதை ரசிக்கவில்லை. முதல் டேக்கே வையுங்கள் என்று சொன்னார்கள். இருந்தாலும் நான் ஒத்துக் கொள்ளாமல் இதுதான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

மோசமான விமர்சனம்:

எடிட்டிங் செய்யும்போது எல்லாருமே முதல் டேக் வைக்க சொல்லி வற்புறுத்தினார்கள். எனக்கும் முதல் சீன்தான் நன்றாக இருக்குமோ என்று சந்தேகம் வந்து அதேதான் படத்தில் வைத்தேன். ஆனால், படம் பார்த்த பிறகு தியேட்டரிலேயே அந்த சீனுக்கு ரொம்ப மோசமான விமர்சனம் வந்தது, அந்த காட்சி மட்டும் நான் நினைத்தது போல் இரண்டாவதாக எடுத்த சீனை வைத்திருந்தால் வேற லெவலில் சென்றிருக்கும். அப்போதுதான் நான் எடுத்த முடிவில் மாறக்கூடாது என்று நினைத்தேன்.

Advertisement