ஹாட் போட்டோவை கேட்ட ரசிகருக்கு, சில்லுனு ஒரு காதல் பிரபல நடிகை கொடுத்த பதில். (ஏம்பா, ஒரு வக்கீல் கிட்ட கேக்குற விஷயமா இது)

0
1059
Shriya Sharma
- Advertisement -

தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி துவங்கி பேபி அனிகா வரை பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் கலக்கி உள்ளார்கள். அப்படி படங்களில் நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த முகங்கள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்தும் விட்டார்கள். அதிலும் அவர்கள் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களை பார்க்கும் போது அந்த குழந்தையா இப்படி எல்லாம் போஸ் கொடுப்பது என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷரியா ஷர்மா.

-விளம்பரம்-

இவர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். தனது மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீயா. இவர் 2005-ம் ஆண்டு சிரஞ்சீவி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : ஹரிஷ் கல்யாணோட அந்த படத்த மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணேன், ஆனா கார்த்தி படத்துக்கு பீல் பண்ணல.

- Advertisement -

இந்த படத்தில் இவரது நடிப்பை கண்டு பலரும் பிரமித்து போனார்கள். அந்த படத்தை தொடர்ந்து நடிகை ஷரியா ஷர்மா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

பின் தெலுங்கில் ஒரு சில படங்களில் கதாநாகியாகவும் நடித்தார். இவர் மும்பையில் சட்ட படிப்பை முடித்த நிலையில் தற்போது வழக்கறிஞர் பட்டத்தை பெற்று வழக்கறிஞராக மாறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் இவரிடம் இன்ஸ்ட்டாவாசி ஒருவர், உங்கள் போட்டோவ அனுப்புங்க என்று கேட்டு இருந்தார். அதற்க்கு, யார் தில்..? என்ன தில்..? எந்த தில்..? என்று பதிலளித்துள்ளார் ஸ்ரேயா.

-விளம்பரம்-
Advertisement