ஒன்னில்ல ரெண்டில்ல இதுவர சிம்புவிற்க்கு இத்தனை நூறு லவ் பைலியர் ஆகி இருக்காம்.

0
2108
simbu
- Advertisement -

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிம்பு. சோசியல் மீடியாவில் எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் அது நம்ம சிம்பு தான். சிம்பு அவர்கள் சிறு வயதிலேயே சினிமா துறைக்குள் நுழைந்து விட்டார். பின் தமிழ் சினிமா உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இவர் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களால் சிம்பு மாநாடு படத்தில் இருந்து விலகினார்.

-விளம்பரம்-

வீடியோவில் 2:49 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

பின் சிம்புவுக்கும் மாநாடு படக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. நடிகர் சிம்பு அவர்கள் மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. இந்த படம் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் சிம்பு அவர்கள் மாநாடு படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.

இதையும் பாருங்க : அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் லுங்கியில் பொது இடத்திற்கு வந்த விஜய் தேவர்கொண்டா.

-விளம்பரம்-

இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளார்கள். டி ராஜேந்திரன் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய மகனுக்கு 500 காதல் தோல்வியில் முடிந்திருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் தன்னுடைய காதல் தோல்வியும், அதனால் என்ன செய்வார் என்பதை பற்றி பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியது, சின்ன வயசுல படிக்கும் போதும், காலேஜ் படிக்கும்போதும் எனக்கு நிறைய லவ் வந்திருக்கு. காதல் என்பது ஒருவருக்கொருவர் புரிதல் வேண்டும்.

பொதுவாகவே பசங்க காதல் தோல்வி அடைந்தால் தண்ணியடிப்பது, இல்ல வேற எதாவது வழியில் தன்னுடைய துக்கத்தை வெளிக்கொண்டு வருகிறார்கள். நான் என்ன செய்வன்னா பயங்கரமாக எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அழுதுடுவேன். என் கண்ணீர் வழிய என்னுடைய மொத்த துக்கத்தை வெளியி கொண்டு வர செய்வேன். ஏன்னா, நம்ம உள்ள இருக்கிற துக்கம் வெளிவரனும் அதற்கு மது அருந்துவதால் வெளியே வராது என்று கூறினார்.

Advertisement