மாநாடு தான் போச்சுன்னு பாத்தா மப்டி ரீ-மேக்கும் அம்பேல்.! சோகத்தில் சிம்பு ரசிகர்கள்.!

0
804
simbhu

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது. மேலும், நடிகர் சிம்பு அவர்கள் விரைவில் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் சிம்பு தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.ஆனால் , நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.

அதைத் தொடர்ந்து, தற்போது அவர் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பின்னர் தன்னுடைய தம்பியின் திருமணத்தில் ரொம்ப பிஸியாக இருந்தார். அதற்குப் பின்னால் சிம்பு குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுலா பயணம் மேற்கொண்டார்கள்.

இதையும் பாருங்க : இறுதி போட்டிக்கு ஏன் வரவில்லை.! தனது குசும்புத்தனத்துடன் பதில் அளித்த சரவணன்.!

- Advertisement -

இதற்கு முன்னால் சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் சிம்புவின் வருகைக்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்தார்.மேலும், அவருடைய கால்ஷீட் தாமதமானதால் மாநாடு படத்திலிருந்து சிம்புவை நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகரை வைத்து படம் இயக்க போவதாக சுரேஷ் காமாட்சி இணையதளங்களில் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிம்பு மாநாடு படத்திற்குப் போட்டியாக “மகா மாநாடு” என்ற படத்தை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்தப் இந்த படத்தை தன்னுடைய தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் தயாரிக்க போகிறார் என்றும் அறிவித்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னால் மீண்டும் ஒரு ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்று மீண்டும் சென்னைக்கு திரும்பினார் சிம்பு.

-விளம்பரம்-
KE Gnanavel Raja and Simbu

சிம்பு இயக்குவதாக இருந்த மகாநாடு படம் என்ன ஆனது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து கன்னடத்தில் வெளியான என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது மேலும் இந்த படத்தின் பூஜைகளும் கூட சமீபத்தில் நடைபெற்றது ஆனால் வழக்கம் போல இந்த படத்திற்கும் சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வராததால், சிம்பு மீது கடுப்பில் ஆழ்ந்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா. மேலும், இந்த படத்தை கைவிட்டதோடு சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.

இதனால் தற்போது திரைப்படத்தின் ரீமேக் படமும் கைவிட பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது தொடர்ந்து சிம்புவின் படங்கள் கைவிடப்பட்டு வருவதால் சிம்புவின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர் மேலும் சிம்பு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மகாநாடு படமாவது வெளியாகுமா இல்லை மற்ற படங்களைப் போல அதுவும் கைவிடப்படும் என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

Advertisement