ஐயப்ப மாலை போட்டுகொண்டு இப்படி பண்ணலாமா ? சிம்புவிற்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.

0
3408
simbhu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர்களின் “மாநாடு” படத்தின் படப்பிடிப்புகள் கூடிய விரைவில் தொடங்க போகிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் சிம்பு அவர்கள் மாநாடு படத்திற்காக மாலை போட்டுக் கொண்டு உள்ளார். அதிலும் மாலை போட்டுக் கொண்டே ஷூ,கண்ணாடி என கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் குறித்து ஓராண்டு காலமாகவே சர்ச்சையில் வந்தது. அது மட்டும் இல்லாமல் திடீரென்று சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் நடிக்க மாட்டேன் என்றும்விலகினார். பின் வெங்கட்பிரபுவும் வேறு ஒரு படத்தில் பிசியாக இருந்து வந்தார். மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் படத்தின் வேலைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் சிம்புவின் கால்ஷிட்க்காக காத்திருந்தார். ஆனால், சிம்புவோ மற்றொரு படத்தில் பிஸியாகவும், வெளிநாடு பயணம் என சுற்றி கொண்டு இருந்தார் என்றும் தெரிய வந்தது.

-விளம்பரம்-

மேலும், சரியான நேரத்தை ஒதுக்க வில்லை. இதனால் சுரேஷ் காமாட்சி அவர்கள் கோபமடைந்து வேறொரு நடிகரை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அது மட்டுமில்லாமல் பல பிரச்சனைகள் எழுந்து தற்போது தான் புயல் அடித்து ஓய்ந்தது போல மாநாடு பிரச்சனை தீர்வுக்கு வந்து உள்ளது. மீண்டும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பின் திடீரென்று சிம்பு அவர்கள் ஐயப்ப சாமி கோயிலுக்கு மாலை போடுவதாக தகவல் வந்தது. மலைக்கு போயிட்டு வருவதற்குள் மாநாடு பாடவேளைகள் முடித்து விடலாம் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக விரதமிருந்து கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தார் நடிகர் சிம்பு.

இதையும் பாருங்க :பெண்ணின் உடலை பார்த்து கதறி அழுத கார்த்தி. உருக்கமான வீடியோ இதோ.

- Advertisement -

மேலும்,1992 ஆம் ஆண்டு எங்க வீட்டு வேலன் படம் சிறப்பாக வந்த சமயத்தில் மாலை போட்டு விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்றார். பிறகு 27 ஆண்டுகளுக்கு மாநாடு படத்திற்காக மாலை போட்டு விரதமிருந்து உள்ளார். மாநாடு படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படம் என்று தெரியவந்துள்ளது. மேலும், மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கரம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பல பிரச்சனைகளுக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் மாலை போட்டுக் கொண்டு சிம்பு அவர்கள் ஷு போட்டு கொண்டு உள்ளார்.

Image

-விளம்பரம்-
Image result for simbu fasting"

அதுமட்டுமில்லாமல் கண்ணுல கண்ணாடி, ஸ்டார் ஓட்டல்ல சாப்பாடு என்ன எப்பவுமே இருக்கிற மாதிரி இருந்து இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. மேலும், அவர் சாண்டி மற்றும் மெட்ராஸ் பட நடிகருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் நடிகர் சிம்பு காலில் ஷூவை அணிந்துள்ளதை கண்ட ரசிகர்கள், மாலை போட்டுக்கொண்டு ஷூ அணியலாமா என்று சிம்புவிற்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள். மேலும், நடிகர் சிம்பு அவர்கள் மாநாடு படத்திற்காக ஐயப்பன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனையில் உள்ளார் என்றும் அதற்கான புகைப்படங்களும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

Advertisement