அட, அப்துல் காலிக் என்பது இந்த பிரபலத்தின் பெயர் தானா. சிம்பு சொன்ன சீக்ரட்

0
1054
- Advertisement -

தமிழ்த் திரையுலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிம்பு. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் சோசியல் மீடியாவில் எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களால் சிம்பு மாநாடு படத்தில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் ‘மகா மாநாடு’ என்ற படத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் வந்தது. இந்த ‘மகா மாநாடு’ படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இப்படி இவர்கள் இருவரும் மாத்தி மாத்தி வாக்குவாதம் செய்து கொண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. நடிகர் சிம்பு மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. இந்த படம் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் வெளிவந்தது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் சிம்பு மாநாடு படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 12ஆம் தேதி தொடங்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். மாநாடு படம் குறித்து சமீபத்தில் பேட்டி சிம்பு அவர்கள் அளித்திருந்தார்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, இந்த படத்தில் நான் முதல் முறையாக முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முஸ்லிம்கள் குறிப்பிட்டு ஒரு சில பேர் குற்றச்சாட்டை வைத்து இருந்தார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. அது எனக்கு மனவருத்தத்தை கொடுத்தது. என்னுடைய நண்பர்களில் முக்கால்வாசிப் பேர் முஸ்லிம்கள் தான். நான் பெரியார் பாடலும் பாடுகிறேன், சபரிமலை செல்கிறேன், முஸ்லிம் கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். எல்லாரையும் போல என்னால் இருக்க முடியாது. வித்தியாசமாக இருப்பதை விட முதலில் மனிதனாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.

எனக்கு பெரியாரிடம் பிடித்த விஷயங்களை வெளியில் சொல்வேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதால் சபரிமலைக்கு செல்வேன். மற்ற மதத்தை சேர்ந்த மக்கள் மீது ஒரு குற்றம் வைக்கும் போது அதற்கு குரல் கொடுப்பதற்காக முஸ்லிமாகவும் நடிப்பேன். அதற்காக இந்த படத்தில் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதற்கு இயக்குனருக்கு தான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த படத்தில் நான் அப்துல் காலிக் என்ற பெயரில் நடக்கிறேன். அது இசையமைப்பாளர் யுவன் சங்கரின் பெயராகும். அவருடைய பெயரில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அப்போ மாநாடு படத்தில் நடிகர் சிம்பு யுவன் ஷங்கர் ராஜாவின் பெயரில் நடிக்கிறார். இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement