வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பவுல் திடீர் மரணம் – குடிப்பழக்கம் தான் காரணமா ?

0
624
- Advertisement -

வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பவுல் இன்று திடீர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து இவர் சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். பின் கடந்த ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலுக்கு இருந்த குடிப்பழக்கம் :

இவர்களின் திருமணத்தின் போது பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்திருந்தது. அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டு இருந்தார்கள்.ஆனால், திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே வனிதாவிற்கும், பீட்டர் பாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். திருமணத்திற்கு முன்னர் பீட்டர் பாலுக்கு அதிகப்படியான குடிப்பழக்கம் இருந்து உள்ளது. ஆனால், வனிதாவை திருமணம் செய்த பின் இனி குடிக்கவே மாட்டேன் என்று கூறி இருக்கிறார் பீட்டர் பாவுல்.

-விளம்பரம்-

பிரிந்த வனிதா :

இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அடிக்கடி பீட்டர் பவுல் குடித்ததால் அவருடன் வனிதா சண்டையிட்டு இருக்கிறார். ஒரு கட்டடத்தில் வெளியூர் சென்ற போது அங்கேயும் பீட்டர் பவுல் தலைகால் தெரியாமல் குடித்துவிட்டு வந்ததால் அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார் வனிதா. அதன் பின்னர் அவரை பிரிந்துவிட்டதாக யூடுயூபில் கண்ணீர் மல்க கூறி இருந்தார். இது குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது.

பீட்டர் பவுல் மரணம் :

வனிதாவை பிரிந்த பின்னர் பீட்டர் பால் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. மேலும் அவரை முன்னாள் மனைவி எலிசபெத்தும் சேர்த்துக் கொள்ளவில்லை. இப்படி ஒரு நிலையில் பீட்டர் பால் கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் என்று அவர் இன்று திடீர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. பீட்டர் பவுலுக்கு இருந்த மது பழக்கமே இவரது இறப்பிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement