பிரபல நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்திரனின் மகன் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு. டி.ராஜேந்தர் இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு, ஹீரோவாக அறிமுகமான படம் ‘காதல் அழிவதில்லை’. டி.ராஜேந்தர் இயக்கிய இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சார்மி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து “தம், கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்கச்சிவந்த வானம்” என அடுத்தடுத்து பல படங்களில் சிம்பு நடித்தார்.
கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’. பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கிய இந்தப் படம், தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க : நடிகர் விமல் முதலில் திரையில் தோன்றியது இந்த விஜய் படத்தில் தான்.
இதனால் பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி எதாவது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவாக தான் இருக்கிறது, அப்படி இருக்க சிம்பு மட்டும் சக்கரை பொங்கலா என்ன? அவரும் அவர் பங்கிற்கு உடற் பயற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனால், மற்ற நடிகர்களை போல பளு தூக்கி மெனக்கெடாமல் ஜாகிங் சென்று உடற் பயற்சி செய்துள்ளார், அதுவும் தனது வீட்டை சுற்றியே ஓடி வந்துள்ளார். அவர் மட்டும் ஓடாமல் அவரை கேமராவுடன் பின்னாடியே வீடியோ எடுத்து வருகிறார் இன்னொருவர். ஜாகிங்கை முடித்துவிட்டு பின்னர் மாரத்தான் ஓடியது போல மூச்சிரைக்க மூச்சை வாங்குகிறார் சிம்பு.
இதையும் பாருங்க : இலவசமாக பெற்ற செவிலியர் சான்றிதழை பதிவிட்ட ஜூலி. அதை நீங்களும் பெறலாம் எப்படி தெரியுமா?
இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. போகிற போக்கை பார்த்தால் ஊரடங்கு முடிவதற்குள் சிம்பு சிக்ஸ் பேக்குடன் தான் வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சிம்பு ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்துவிட்டு சிக்ஸ் பேக் வந்து விட்டதா என்று டி-ஷர்ட்டை தூக்கி பார்த்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.