அதிரடியாக கயல்- எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்திருக்கும் புது சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. மேலும், சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி, விஜய் டிவி திகழ்கிறது. அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி, விஜய் டிவி சீரியல் தான் முன்னிலை வகுத்து வருகிறது.
டிஆர்பி ரேட்டிங் பட்டியல்:
இந்நிலையில் இந்த வருடத்தின் 45 வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதலிடத்தை சிங்க பெண்ணே சீரியல் பிடித்திருக்கிறது. எப்போதுமே முதலிடத்தை கயல், எதிர்நீச்சல் சீரியல் தான் மாற்றி மாற்றி பிடிக்கும். இந்த முறை சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 10.28. தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி.
சிங்க பெண்ணே சீரியல்:
இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
கயல்:
டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் 10.23 புள்ளி பிடித்து இருக்கிறது. இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். தன் குடும்பத்திற்காக ஆசை, சந்தோசம் எல்லாத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை கயல் சீரியல். இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை பி செல்வம் இயக்குகிறார். தற்போது கயல் சீரியலில் எழினுடைய காதலை கயல் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விடுகிறார். சீரியல் சுவாரஸ்யத்துடன் போகிறார் என்பது தான் சீரியலின் கதை.
வானத்தைப்போல:
இந்த தொடர் டி ஆர் பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 9.76 ரேட்டிங்க் ஆகும். இது அண்ணன்- தங்கை சென்டிமென்ட்டை மையமாக கொண்ட கதை. இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார். பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
எதிர்நீச்சல் சீரியல்:
டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியலும் மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது. 9.76 ரேட்டிங்க் ஆகும். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்கள் உரிமையை மையமாக கொண்ட கதை. அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் ஆதி குணசேகரன் ஸ்கோர் செய்து வருகிறார்.
சுந்தரி 2 சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. . தற்போது இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த சுந்தரி 2 சீரியல் 9.39 TRP ஆகும்.
இனியா:
இந்த சீரியல் டிஆர்பி 7.75 ஆகும். இந்த தொடரில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த மானசா ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
இதை அடுத்து ஆனந்த ராகம் சீரியல்- 7 .32 டிஆர்பி
சிறகடிக்க ஆசை சீரியல்-6.97 TRP
பாக்கியலட்சுமி – 6.97 TRP
ஆஹா கல்யாணம் சீரியல்-6 .12 TRP
பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்- 5.53 TRP
மகாநதி சீரியல்- 5.17 TRP