‘சீரியல்ல நடிக்கிற எண்ணமே இல்ல’ சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்து வரும் மின்சார கண்ணா பட நடிகர்.

0
631
- Advertisement -

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கண்ணா படத்தில் விஜயின் அண்ணனாக கூர்கா வேடத்தில் நடித்த நடிகர் சந்திரகாந்த். இவர் இந்த படத்தில் பார்க்க செகண்ட் ஹீரோ போல் மாஸாகவும், காமெடி வேடத்திலும் கலக்கி இருந்தார். இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீகாந்த். இவர் நடிகை ஸ்ரீபிரியாவின் தம்பி ஆவார். கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தான் சந்திரகாந்த் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் கனகா நடித்த ஒரு படத்தில் கதாநாயகனாகவும் சந்திரகாந்த் நடித்திருந்தார். இவர் சுகன்யாவுடன் அன்று கண்ட முகம் என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், இவர் கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த இந்தியன் படத்தில் நெடுமுடி வேணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே என்ற தொடரில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சிங்கப்பெண்ணே சீரியல்:

தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி. இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இதில் வில்லனாக சந்திரகாந்த் நடிக்கிறார். இந்த தொடரில் இவர் கருணாகரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், 78 ல் ஃபிலிம் எடிட்டராக தான் என்னுடைய கேரியரை தொடங்கினேன். கிட்டத்தட்ட 75 படங்கள் வரை எடிட்டராக வேலை செய்து இருந்தேன். டைரக்ஷனில் தெலுங்கில் பெரிய இயக்குனரிடம் மூன்று வருஷம் வேலை செய்தேன். அதற்குப் பிறகுதான் பாலு மகேந்திரா சாரிடம் இருந்தேன். எடிட்டிங் ரூமுக்குள் போன பிறகுதான் சினிமா என்பது என்ன என்று கற்றுக் கொண்டேன். ஒருமுறை ரவி சார் என்னை போட்டோ எடுத்திருந்தார். அந்த சமயம் தான் பாலசந்தர் சாரிடம் வசந்த் அசிஸ்டன்ட் ஆக இருந்தார். மனதில் உறுதி வேண்டும் படத்துக்காக புதுமுகம் தேடிக் கொண்டிருக்கும் போது வசந்த் வசந்த் சார் சொல்லவும் என்னுடைய போட்டோவை காட்டியிருந்தார்கள்.

-விளம்பரம்-

சினிமா அனுபவம்:

அதை கொண்டு போய் பாலசந்தர் சாரிடம் காட்டி இவர் நடிகை ஸ்ரீபிரியாவின் சகோதரர் என்று வசந்த் சொல்லி இருக்கிறார். அதன் மூலம் தான் எனக்கு பாலசந்தர் சாரிடம் அழைப்பு வந்தது. அவர் ஆக்டிங் பண்ணுவியா என்று கேட்டார். இதுவரைக்கும் நான் எடிட்டிங் தான் பண்ணி இருக்கிறேன். ஆக்டிங் அழைப்பு வரவில்லை என்று சொன்னேன். மறுநாள் அவர் நீ நன்றாக பண்ணுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீ நடி என்று எனக்கு தைரியம் கொடுத்தார். பின் நான் முதல் சாட்டில் ஓகே பண்ணி விட்டேன். இதனால் என்னை இயக்குனர் கட்டிப்பிடித்து பாராட்டியிருந்தார். யூனிட்டே கைதட்டி என்னை என்கரேஜ் செய்திருந்தார்கள்.
அதற்கு பிறகு நிறைய படங்கள் பண்ணேன்.

விஜய்-கமல் குறித்து சொன்னது:

விஜய் உடைய மின்சார கண்ணா படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது விஜய் சாரோட பிறந்தநாள். எல்லோரும் அவருடைய பார்ட்டிக்கு சென்று இருந்தார்கள். அழைப்பில்லாமல் நான் எப்படி வருவது என்று இருந்தேன். இது விஜய் சாருக்கு தெரிந்து அவர் என்னுடைய ரூமுக்கு போன் செய்து என்னை பார்ட்டிக்கு வர சொல்லி இருந்தார். அந்த அளவுக்கு அன்பான மனிதன், அவரிடம் உயர்ந்த குணம் இருக்கிறது. இன்னைக்கும் அவர் பெருசா வளர்ந்திருப்பதற்கு காரணம் இதுதான். ஒரு அண்ணனாக அவருடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது. மேலும், இந்தியன் படத்தில் போலீஸ்கதாபாத்திரத்தில் நடித்த பிறகு போலீஸ் வேடமாக தான் வந்தது.

சீரியல் குறித்து சொன்னது:

அதனால் வேண்டாம் என்று சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். நான் ரெண்டு ஸ்கிரிப்ட் ரெடியா வைத்திருக்கிறேன். அதை எப்படியாச்சும் என் டைரக்ஷனில் வெளிக்கொண்டு வரணும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பிரண்ட் தனுஷ் கிருஷ்ணா. அவர்தான் சிங்க பெண்ணே சீரியல் இயக்குனர். அவர்தான் இந்த கதாபாத்திரம் நீங்க பண்ணனும் என்று சொன்னார். அவருக்காக தான் நான் நடிக்க சம்மதித்தேன். எனக்கு சீரியல் பண்ற, நடிக்கிற ஐடியாவே கிடையாது. தனுஷ் சொன்னதால்தான் சம்மதித்தேன். சினிமாவை விட சீரியல் ரீச் ரொம்ப பெரிய அளவில் இருக்கிறது. எனக்கு ஒரு பையன் இருக்கிறான். அவன் ஐடியில் வேலை பார்த்துட்டு இருந்தான். இப்ப சினிமாவில் ஆர்வம் இருக்கிறதுனால ஷார்ட் பிலிம் எடுத்துக் கொண்டிருக்கிறான். எனக்கு இயக்கத்தில் ஆசை என்பதால் அவனும் ஒரு படம் கூடிய சீக்கிரம் பண்ணுவான் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement