மிர்ச்சி சிவாவின் ‘தமிழ் படம்’ ரேஞ்சுக்கு பீஸ்ட்டை கலாய்த்த பாடகர் ஸ்ரீனிவாசன் – திட்டி தீர்த்த ரசிகர்களால் பதிவு நீக்கம்.

0
613
Beast
- Advertisement -

பீஸ்ட் படத்தை கலாய்த்த பிரபல பாடகரை விஜய் ரசிகர்கள் வச்சி செய்யும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. தற்போது நெல்சன் அவர்கள் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ஒரு mallலை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்த தீவிரவாத கும்பலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் என்று பலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

பீஸ்ட் வசூல் சாதனை:

எதிர்பாராத விதமாக இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றுவிடுகிறது. தமிழகத்தில் மட்டும் 800-க்கும் அதிகமான திரையரங்குகள் பீஸ்ட் படம் வெளியிடப்பட்டது. படம் வெளியான முதல் நாளே வலிமை, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் ஆகிய பட வசூலை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டதாக ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் தியேட்டர்களில் பீஸ்ட் செகண்ட் ஆஃப் ஓடிக்கொண்டிருக்கும் போதே சோசியல் மீடியாவில் பீஸ்ட் குறித்த மீம்ஸ் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள், நெல்சன் இயக்கத்தில் சொதப்பி விட்டார் என்று தாறுமாறாக விமர்சனங்கள் குவிந்து இருந்தது.

Vijay Beast Movie Bgm Copied | பீஸ்ட் Bgm யாஷ் பட காப்பியா

பீஸ்ட் குறித்த விமர்சனம்:

பின் மறுநாள் கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு தமிழகம் முழுவதும் தாறுமாறாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உடனே யூட்யூப் ரியூவர்ஸ் முதல் நெட்டிசன்கள் வரை எல்லோருமே கேஜிஎஃப் படத்துடன் ஒப்பிட்டு பீஸ்ட்டை பயங்கரமாக கலாய்த்து விமர்சிக்க ஆரம்பித்தார்கள். இப்படி சோசியல் மீடியாவில் ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் பீஸ்ட் படத்தை விமர்சித்து இருந்தாலும் இதுவரை பீஸ்ட் படத்தை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் படம் பார்த்த நிலையில் இருவருக்குமே திருப்தி அளிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-

பீஸ்ட் குறித்து எஸ் ஏ சந்திரசேகர்- ரஜினிகாந்த் கூறியது:

விஜயின் அப்பா என்பதால் எஸ் ஏ சந்திரசேகர் ஓபனாக படம் சரியில்லை என்று சொல்லிவிட்டார். ரஜினிகாந்த் பீஸ்ட்டை பார்த்து எப்படி இருந்தது? என கேட்டதற்கு ஐஸ்கிரீம் நல்லா இருந்தது என்று ஒற்றை வார்த்தையில் பயங்கரமாக கூறியிருந்தார். இப்படி சமூக வலைத்தளங்கள் முழுவதும் பீஸ்ட் குறித்த மீம்ஸ்,ட்ரோல் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் எல்லோரும் செம கடுப்பில் உள்ளார்கள். இந்த நிலையில் வாலன்டியராக வாயை கொடுத்து மாட்டி இருக்கிறார் பிரபல பாடகர் சீனிவாஸ். இவர் பீஸ்ட் படத்தை குறித்து விமர்சித்ததற்கு ரசிகர்கள் பயங்கரமாக வச்சி செய்கிறார்கல்.

பாடகர் சீனிவாஸ்ஸை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்:

அப்படி என்ன பாடகர் சீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார் என்றால், “Is Beast a spoof on mega heroic movies”. அதாவது ‘பீஸ்ட் திரைப்படம் மெகா ஹீரோக்களின் கேலியா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது போதாதா விஜய் ரசிகர்களுக்கு? ஏற்கனவே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்த விஜய் ரசிகர்கள் ஸ்ரீனிவாசனின் டீவ்ட்டால் கொந்தளித்து சகட்டுமேனிக்கு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் தான் மாஸ் ஹீரோக்கள் படங்களை கேலி செய்யும் ஒரு Spoof படமாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement