விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரதியின் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோருமே விஜயா வீட்டிற்கு வந்து ப்ரச்சனை செய்தார்கள். அப்போது அவர்கள் ரொம்ப மோசமாக விஜயாவை திட்டினார்கள். அது மட்டும் இல்லாமல் விஜயாவை ரதியின் அம்மா அடிக்கவே போனார். உடனே மீனா தடுத்து நிறுத்தி, என் அத்தை மீது கை வைத்தால் உண்டு இல்லை என்று செய்து விடுவேன் என்று மிரட்டினார். விஜயா இதையெல்லாம் பார்த்து ஆடிப் போய்விட்டார். பின் ரதியின் உறவினர்கள், இந்த அம்மா கிளாஸ்சில் தான் என் மகள் தப்பு செய்திருக்கிறாள். அந்தப் பையன் வீட்டில் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

எல்லாத்துக்கும் காரணம் இந்த அம்மா தான். வகுப்பை எடுப்பதை விட்டு தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறார் என்று இன்னும் கோபப்பட்டு திட்டினார்கள். இதனால் முத்து, ரதியின் குடும்பத்தை சமாதானப்படுத்தி இந்த பிரச்சினையை நான் தீர்க்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். விஜயாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, இந்த பிரச்சனையை முத்துவால் தான் தீர்க்க முடியும். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். உடனே முத்து, என் உயிரை கொடுத்தாவது உங்களை நான் காப்பாற்றுவேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசினார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்து, க்ரிஷ் அவருடைய பாட்டியை பார்க்க போகணும் என்று சொல்கிறான். யார் அழைத்து செல்வது என்று கேட்டார். உடனே விஜயா, ரோகினியை பார்த்து இதை போற வழியில் எங்கேயாவது தொலைத்திட்டு வா. பிரச்சனை முடியும் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் அண்ணாமலை- முத்து இருவருமே கோபப்பட்டு விஜயாவை திட்டினார்கள். அதற்குப்பின் முத்துவிடம் மீனா, பார்வதி ஆண்டியிடம் நான் ரதியை காதலித்தவன் நம்பரை வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கிரிஷை அழைத்துக் கொண்டு ரோகினி தன்னுடைய அம்மாவை பார்க்க போனார். அங்கு கிரிஷ், எனக்கு அந்த வீடு ரொம்ப பிடித்திருக்கிறது.

நேற்று எபிசோட்:
அங்கு ஜாலியாக இருக்கிறது என்றெல்லாம் பேசி இருந்தார். அதற்கு ரோகினி, ஒவ்வொரு நாளும் இவனை நினைத்து பயமாக இருக்கிறது. மாட்டிக்கொள்வானா தெரியல? எப்படியாவது உன்னை வீட்டுக்கு அழைத்து போகணும் என்றெல்லாம் சொன்னார். அதற்குப்பின் விஜயாவை பார்ப்பதற்காக பார்வதி, சிந்தாமணி இருவருமே வந்தார்கள். அப்போது சிந்தாமணி, விஜயாவை பயமுறுத்தும் மாதிரியே பேசி இருந்தார். உடனே மீனா, என் கணவர் இருக்கும்போது யாரும் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னார். பின் சிந்தாமணி, முத்து- மீனா இருவரையுமே ஏளனமாக பேச, ஸ்ருதி சப்போர்ட் செய்தார். பின் சிந்தாமணி சென்ற பிறகு ஸ்ருதியின் அம்மா, விஜயாவிடம் நலம் விசாரித்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா, இங்கிருந்தால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். கேரளாவில் எங்களுக்கு சொந்தமான போட்ஹவுஸ் இருக்கிறது. அங்கு சென்று விடுங்கள் என்று சொல்கிறார் உடனே ரவி, அதெல்லாம் தேவையில்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஷோரூமில் மனோஜ் எல்லோரிடமே எரிந்து விழுந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரோகினி, அத்தைக்கு இருக்கும் பிரச்சனையை நாம் தீர்த்து வைக்கலாம் இதனால் அத்தை மனசு மாறி நம் இருவரையும் ஏற்றுக்கொள்வார் என்றெல்லாம் சொல்ல, மனோஜூம் சரி என்கிறார். இன்னொரு பக்கம் மீனா, தீபன் இடம் பேசி வர வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ரதியின் வீட்டிற்கு சென்ற மனோஜ், இந்த குழந்தையை கலைத்துவிட்டு. ரதிக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று ஏடாகூடமாக பேசுகிறார். இதைக் கேட்ட ரதி குடும்பத்தினர் மனோஜை அடித்து கட்டிப்போட்டு வைக்கிறார்கள். என்ன செய்வதென்றே புரியாமல் ரோகினி அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் மீனா சொன்ன இடத்திற்கு வந்த தீபன், முத்துவை அடி வெளுத்து வாங்குகிறார். அப்போது தீபன், நான் ரதியை உண்மையாக காதலிக்கிறேன். ஆனால், என்னுடைய வீட்டில் தான் ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்கிறார். இதனால் முத்து, உன்னுடைய அப்பா- அம்மாவை ரதி வீட்டிற்கு வரச்சொல்லி நான் சொல்வதைப் போல் செய் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






