விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, மீனா இருப்பது போலவே நினைத்து இருந்தார். எங்கு பார்த்தாலும் மீனா தெரிவது போலவே அவர் கண்ணுக்கு இருக்கிறது. அதற்கு பின் முத்து, மீனாவின் பூக்கடை பக்கமாக வந்தார். அப்போது மீனாவின் தோழிகள் முத்துவை வம்பு இழுத்து பூ வாங்கும் இடத்தில் விட சொல்லி கேட்டதால் முத்துவுமே அவர்களை ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது மீனாவின் தோழிகள், கணவன்- மனைவி இடையே சண்டை வருது சகஜம்தான். இருவரும் பேசிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால், முத்து-மீனா இருவருமே பேசிக்கொள்ளவில்லை. இருவரும் மனதுக்குள் வருத்தப்பட்டார்கள்.

இன்னொரு பக்கம் மனோஜ், ரோகினி இருவருமே ஷோரூமில் இருந்தார்கள். அப்போது அங்கு கணவன் மனைவி இருவருமே வேலைக்கு கேட்டு வந்தார்கள். மனோஜ், ஒருவருக்கு தான் வேலை இருக்கிறது என்று சொன்னவுடன் அந்தப் பெண் ரோகினியை பார்த்து ஐஸ் வைத்து பேசி இருந்தார். உடனே ரோகினி, வீட்டிற்கு சமையல் செய்ய ஆள் வேண்டும். அதனால் ரெண்டு பேரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
அதற்கு பின்னர் ரோகினி, அந்த பெண்ணை வீட்டில் அழைத்து வந்த ரோகினி, மீனா வரும் வரை ராணி சமையல் செய்வார் என்றவுடன் விஜயாவும் சம்பாதித்தார். பின் ராணி சமைக்க சொல்லி அனுப்பினார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ராணி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு காரம் தாங்க முடியாமல் மொத்த குடும்பமே கதறுகிறது. விஜயா, சுருதி இருவருமே கத்தினார்கள். ஆனால், ரோகினி சமாளித்துக் கொண்டு அமைதியாக இருந்தார். பின் கோபப்பட்ட விஜயா, இனிமேல் இவளை கிச்சன் பக்கமே அனுப்பாதே. உன்னுடைய ஷோரூமில் வைத்துக் கொள்ளு என்று திட்டி விட்டார். அப்போது முத்து, இப்போதாவது மீனாவின் அருமை தெரிகிறதா? என்று கேட்டார். உடனே அண்ணாமலை, ஒருவர் இல்லாத போது தான் அவர்களுடைய அருமை தெரியும். அது உனக்கும் உன்னுடைய அம்மாவிற்கும் தான் சொல்கிறேன் என்றார்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் செல்வம் தனக்கு தெரிந்தவருடைய கார் டெக்கரேஷன் செய்வதற்காக மீனாவை அழைத்திருந்தார். மீனாவும் அவருடைய தோழிகளும் கார் டெக்கரேஷன் செய்த இடத்திற்கு முத்து வந்தார். முத்துவை பார்த்தவுடன் ஜாடமாடையாக மீனா விசாரித்தார். முத்துவுமே தன்னுடைய நண்பர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா ரோகினியின் ஷோரூமுக்கு வந்து கொடுத்த பணத்தை எப்ப தரப்போகிறார்? என்று கேட்க, ரோகினி டைம் கேட்டார். பின் ஸ்ருதி அம்மா, ரவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று நீத்துவை பற்றி விசாரிக்க சொல்ல, ரோகினி முடியாது என்றார். இதனால் ஸ்ருதியின் அம்மா மிரட்டினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து வீட்டுக்கு வருகிறார். அங்கு இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்து மீனாதான் சமைத்தார் என்று தெரிந்து கொண்டு மீனா பெயரை கூப்பிடுகிறார். மீனாவும் ரூமில் இருந்து வெளியே வந்துவிடுகிறார். பின் முத்து, மீனா இருவருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சுருதி-ரவி இருவரும் மீனா- முத்து இணைந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். அடுத்த நாள் மீனாவிற்கு போன் செய்த சீதா, என் மாமியார் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நீயும் மாமாவும் வந்துவிட வேண்டும். அருண் சொல்ல சொன்னார் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் இதைப் பற்றி மீனா முத்துவிடம் சொல்கிறார். அதற்கு முத்து, நான் அங்கு வந்தால் தேவையில்லாமல் பிரச்சனையாகும். நீ நல்லபடியாக போயிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அதற்குப்பின் அருண் வீட்டிற்கு வந்த மீனாவிடம் முத்து வராததை பற்றி விசாரிக்கிறார்கள். மீனாவும் ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். அதற்குப்பின் சீதா, மாமியார் இருவருமே சந்தோஷமாக பரிமாறிக் கொண்டு பேசி கொள்கிறார்கள். இதை பார்த்து அங்கிருந்தவர்கள், மாமியார் மருமகள் போல் தெரியவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். உடனே சீதா தன் மாமியாருக்கு சுத்தி போடுகிறார். இதை எல்லாம் பார்த்து மீனாவிற்கு தன் மாமியார் நடத்தும் விதத்தை நினைத்து வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






