விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, கிரிஷ் உன்னையும் பார்த்துக் கொள்வதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். முத்துவிடம் நான் சொல்வது போலவே சொல் என்றார். அதற்கு ரோகினி அம்மாவும் சம்மதித்தார். பின் கிரிஷ், யாரிடமும் சொல்லாமல் ரோகினி ரூமுக்கு சென்று விட்டார். அப்போது ரோகினி, நான் தான் உன் அம்மா என்று யாரிடமும் சொல்லாதே என்று சொன்னார். அதற்கு பின்பு மீனா தேடி வர, கிரிஷ் ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். மறுநாள் காலையில் கிரிஷ் பள்ளிக்கு லீவ் லெட்டர் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

உடனே விஜயா, முத்து-மீனா இருவரும் படிக்காததை பற்றி கிண்டல் கேலி செய்தார். பின் ரோகினி, கடிதம் எழுதி தந்தார். ஆனால், பழக்க தோஷத்தில் ரோகினி தன் பெயர் எழுதி விட, மனோஜ் அதை பார்த்து கேள்வி கேட்டார். உடனே ரோகினி ஏதோ சமாளித்து விட்டார். இன்னொரு பக்கம் விஜயா, பரதநாட்டிய வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது காதல் ஜோடியில் அந்த பெண் மயங்கி கீழே விழுந்தார். பின் விஜயா, மருத்துவரை வரவைத்து செக் பண்ண, டாக்டர் இந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார். நீங்கள் பாட்டியாகப் போகிறீர்கள் என்று சொன்னார். இதை கேட்டு விஜயா மயங்கி விழுந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மயக்கம் தெளிந்த விஜயா, அந்தப் பொண்ணு இப்படி செய்வாள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை ரொம்ப என்று புலம்பினார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே கிரிஷை அழைத்துக் கொண்டு ரோகினியின் அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார்கள். அங்கு ரோகினி அம்மா, இனி கிரிஷ் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால், முத்து-மீனா இருவருமே கேட்கவில்லை. நீங்கள் குணமடையும் வரை கிரிஷை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். இதையெல்லாம் ரோகிணி ஒளிந்து நிண்டு கேட்டுக்கொண்டார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டில் கிரிஷ் யாருக்கும் தெரியாமல் ரோகிணியின் ரூமிக்க போனார். அப்போது ரோகினி, நீ இங்கே வராதே, வெளியே போ என்று கிரிஷை அடிக்க, அந்த சமயம் வந்த மீனா, எதற்காக கிரிஷை அடித்தீர்கள் என்று ரோகினிடம் சண்டை போட்டார். அப்போது முத்து, ரோகினி அடித்தாரா? என்று கேட்டதற்கு, கிரிஷ் இல்லை என்று பொய் சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் வித்யாவிற்கு ஃபோன் செய்த ரோகினி, கிரிஷ் கொஞ்ச நாள் உன்னுடைய வீட்டில் இருக்கட்டும் என்று கேட்க, வித்யா என்னால் முடியாது. நீ உண்மையை சொல்லு தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்ளாதே என்று அறிவுரை சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் கிரிஷ், சுருதி, ரவி, முத்து நான்கு பேருமே டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். வீடே கலகலப்பாக இருக்கிறது. அந்த சமயம் பார்த்து காதல் ஜோடி ரதி ரதியின் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோருமே விஜயா வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அப்போது அவர்கள் ரொம்ப மோசமாக விஜயாவை திட்டுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் விஜயாவை ரதியின் அம்மா அடிக்கவே போகிறார். உடனே மீனா தடுத்து நிறுத்தி, என் அத்தை மீது கை வைத்தால் உண்டு இல்லை என்று செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். விஜயா இதையெல்லாம் பார்த்து ஆடிப் போய்விட்டார். பின் ரதியின் உறவினர்கள், இந்த அம்மா கிளாஸ்சில் தான் என் மகள் தப்பு செய்திருக்கிறாள். அந்தப் பையன் வீட்டில் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

சீரியல் ட்ராக்:
எல்லாத்துக்கும் காரணம் இந்த அம்மா தான். வகுப்பை எடுப்பதை விட்டு தேவையில்லாத வேலை எல்லாம் செய்ய வைத்திருக்கிறார் என்று இன்னும் கோபப்பட்டு திட்டுகிறார்கள். இதனால் முத்து, ரதியின் குடும்பத்தை சமாதானப்படுத்தி இந்த பிரச்சினையை நான் தீர்க்கப் பார்க்கிறேன். தயவுசெய்து பிரச்சினை செய்ய வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். விஜயாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பின் அண்ணாமலை, இந்த பிரச்சனையை முத்துவால் தான் தீர்க்க முடியும். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொல்கிறார். உடனே முத்து, என் உயிரை கொடுத்தாவது உங்களை நான் காப்பாற்றுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






