விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், சீதாவை தான் நான் முதல் திருமணம் செய்தேன். எங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் ஆகிவிட்டது என்று சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆனது. முத்துவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. எங்கள் வீட்டுப்பிள்ளையை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாயா? என்று அருணின் சட்டையை பிடிக்க போனார். உடனே அருண் நண்பர், அருணிற்கு நான் சாட்சி கையெழுத்து போட்டேன். சீதாவிற்கு அவருடைய அக்கா மீனாதான் கையெழுத்து போட்டார் என்று சொன்னார். இதை முத்துவால் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. கடைசியில் மீனாவுமே உண்மையை ஒத்துக் கொண்டார். இதனால் முத்துவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி மீனாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பின் விஜயா இது தான் சந்தர்ப்பம் என்று மீனா குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார். அதிர்ச்சியில் மீனாவின் அம்மா, சீதா- மீனா இருவரையும் அடித்தார். அருண் அம்மா, இவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள். திருமணத்தை நடத்தலாம் என்று சொல்வதற்கு சீதாவின் அம்மா எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சீதா, தன் குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். அப்போது அவருடைய அம்மா, முத்து வந்தால் தான் இந்த திருமணம் நடக்கும் என்பதால் சீதா- மீனா இருவருமே முத்துவைத் தேடி போனார்கள். இன்னொரு பக்கம் அருண், என்ன நடக்குமோ? என்று புரியாமல் பயத்தில் இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்து, பாரில் பயங்கரமாக குடித்துவிட்டு மீனா செய்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர், மீனா ஓடிப் போய்விட்டாளா? என்று மோசமாக பேசி இருந்தார். அதனால் கோபப்பட்ட முத்து, அவரிடம் சண்டை போட்டார். அந்த சமயம் பார்த்து மீனா- சீதா இருவருமே பாருக்கு வந்துவிட்டார்கள். முத்துவிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்க, அவர் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் சீதா மண்டபத்தில் இல்லை என்று தெரிந்த அருண் அவருடைய அம்மாவிடம் சண்டை போட்டார். அதற்கு சீதாவின் அம்மா, முத்து இல்லாமல் இந்த திருமணம் நடக்காது என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
உடனே அருண், என்னிடம் சொல்லாமல் சீதா எப்படி போகலாம் என்று சீதாவிற்கு ஃபோன் செய்து கொண்டிருந்தார். ஆனால், சீதா ஃபோனை எடுக்கவில்லை. முத்து மனமும் மாறவில்லை. மண்டபம் முழுக்க கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்று எல்லோருமே தவறாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதனால் அருணுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மீனாவின் அம்மா, முத்து வரவைக்கும் திருமணம் நடக்காது என்பதில் உறுதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அதிகாரிகள் எல்லாரும் வருவதால் அருணால் எதுவுமே பேச முடியவில்லை. இதனால் கோபத்தில் அருண், மண்டபத்தில் இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று வெளியே கிளம்பப் பார்க்கிறார். உடனே அண்ணாமலை, எல்லா தவறும் நீங்கள் செய்துவிட்டு பெண் வீட்டிற்கு தண்டனை கொடுப்பது சரி இல்லை. பொறுமையாக தான் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்கிறார். இதனால் அருணுமே அமைதியாகி விடுகிறார். அதற்குப் பின் செல்வம், முத்துவை மண்டபத்திற்கு அழைத்து வருகிறார். சீதா- மீனா இருவருமே மண்டபத்திற்கு வந்துவிடுகிறார்கள். முத்துவின் நிலைமையை பார்த்து மண்டபத்தில் உள்ள எல்லோருமே கேவலமாகவும் தவறாகவும் பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
இருந்தாலுமே அதை பற்றி எதையும் கவலை கொள்ளாமல் மீனா அமைதியாக இருக்கிறார். ஒரு வழியாக சீதா-அருண் கல்யாணம் நடந்து விடுகிறது. அப்போது மீனா, முத்து விடம் பேசப்போகிறார். முத்து, சீதா அழுததால் தான் நான் இங்கு வந்தேன். இனிமேல் உன் குடும்பத்தில் எந்த ஒரு விஷயம் என்றாலும் நான் தலையிட மாட்டேன். உன் வீட்டிற்கும் வரமாட்டேன். நீயும் என் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் மீனாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை அழுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே முத்து செய்த வேலையையும் மீனா குடும்பத்தையும் பற்றியும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை, மீனா குடும்பத்திற்கு தான் சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். அந்த சமயம் வந்த முத்து போதையில் உளறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






