விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், விவாகரத்து கொடுக்க விருப்பம் என்று ஒரு டாக்குமெண்ட்டை ரெடி பண்ணி அதில் கையெழுத்து போட சொன்னார். ரோகிணி, அதற்கு முன்பு நான் கொடுக்கும் டாக்குமெண்டில் கையெழுத்து போடு. அதில் விவாகரத்து வேண்டாம் என்று எழுதி இருக்கிறது. மனோஜ் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. உடனே ரோகினி, நீ கையெழுத்து போடவில்லை என்றால் நான் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். மனோஜ் பயந்து வெளியே தப்பிக்க பார்த்தார். ரோகினி விடவில்லை. பாத்ரூமுக்கு சென்ற மனோஜ், தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து சொன்னார்

ரோகிணி தன்னை பிளாக்மெயில் செய்யும் விஷயத்தைப் பற்றி மனோஜ், விஜயாவிடம் சொன்னார். பதறிப் போன விஜயா வீட்டில் ரோகினி செய்த விஷயத்தை சொன்னார். பின் முத்து-மீனா இருவரும் மனோஜை காப்பாற்றுவதற்காக ஓட்டலுக்கு சென்றார்கள். இன்னொரு பக்கம் ஓட்டலில் ரோகிணி, கையெழுத்து போடுகிறாயா? நான் தூக்கு மாட்டட்டுமா? என்று மிரட்டிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மனோஜ் பயந்து கொண்டு கையெழுத்து போட போனார். உடனே அந்த இடத்திற்கு கிரிஷ் வந்து விட்டார். கிரிசை பார்த்த ரோகினி, யார் உன்னை அழைத்து வந்தது என்றார்
சிறகடிக்க ஆசை:
அப்போது முத்து-மீனா இருவரும் உள்ளே வந்தார்கள். ரோகினி, தன்னுடைய திட்டம் எல்லாம் சொதப்பிவிட்டதே என்று கோபப்பட்டார். முத்து, மனோஜை திட்டி அங்கிருந்து அழைத்து செல்கிறார். மீனாவுமே ரோகிணிக்கு வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து, ஹோட்டலில் நடந்தது எல்லாம் சொல்கிறார். விஜயா, மனோஜை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். ரவி, அண்ணாமலை எல்லோருமே திட்டினார்கள். பின் விஜயா, இதற்கெல்லாம் காரணம் மீனாவுடைய ராசி தான். அவள் இந்த வீட்டை விட்டு போனால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, மீனாவை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை, விஜயாவை திட்டி அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி ஹோட்டலுக்கு வந்த மீனா, வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது வந்த நீத்து, ரவியை தனியாக அழைத்து சென்று ஹோட்டல் மீதி சம்பள பணத்தை கொடுத்துவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். ரவியால் எதுவும் சொல்ல முடியவில்லை.

சீரியல் ட்ராக்:
சுருதி, ரவியை திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அண்ணாமலை வாக்கிங் வந்து கொண்டிரந்தார் .அப்போது அந்த வழியாக பைக்கை ஓட்டி வந்த நபர் அண்ணாமலை மீது மோதி விடுகிறார். இதனால் அண்ணாமலை, ஹாஸ்பிடலில் இருக்கிறார். இதை அறிந்த மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு சென்று விடுகிறார்கள். விஜயா, இது தான் சந்தர்ப்பம் என்று மீனாவின் ராசியை, குணத்தையும் ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். மீனா ரொம்ப உடைந்து விட்டார். இத்துடன் சீரியல் முடிகிறது






