விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, சீதா அழுததால் தான் நான் இங்கு வந்தேன். இனிமேல் உன் குடும்பத்தில் எந்த ஒரு விஷயம் என்றாலும் நான் தலையிட மாட்டேன். உன் வீட்டிற்கும் வரமாட்டேன். நீயும் என் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே முத்து செய்த வேலையையும் மீனா குடும்பத்தையும் பற்றியும் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அண்ணாமலை, மீனா குடும்பத்திற்கு தான் சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அந்த சமயம் வந்த முத்து போதையில் உளறிக் கொண்டிருந்தார்.

மீனா செய்த துரோகத்தை நினைத்து முத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் மீனா வீட்டிற்கு வர, முத்து கோபப்பட்டு பயங்கரமாக திட்டி இருந்தார். ஆனால், மீனா எதுவும் பேசாமல் அண்ணாமலையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு அண்ணாமலை, நீ இப்படி செய்வ என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார். உடனே மீனா, சீதா-அருண் திருமணம் செய்ததற்கான காரணத்தைப் பற்றி சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயா, மனோஜ், ரோகினி மூவருமே முத்துவும், மீனாவையும் பிரிப்பதற்காக சதி வேலைகளை செய்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
ஒரு கட்டத்தில் முத்து, இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடக்கும் பிரச்சனை. யாரும் தலையிட தேவையில்லை. நீ வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னார். இதனால் மீனா எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். இன்னொரு பக்கம் அருண், என்ன இருந்தாலும் நீ முத்துவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மண்டபத்தை விட்டு போயிருக்கக் கூடாது என்று பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தார். அப்போது மீனாவின் அம்மா, உன் தங்கை வாழ்க்கைக்காக உன்னுடைய வாழ்க்கையை இழந்து விட்டாயே என்று ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மொட்டை மாடியில் மனோஜ், உன் பொண்டாட்டி இதைத் தவிர உன்னிடம் என்னவெல்லாம் மறந்தாள் என்று கேட்டுப்பார் என்றார். முத்துவுமே மீனாவிற்கு போன் செய்து என்னிடம் என்ன மறைத்தாய்? என்று கேட்டார். ஆனால், மீனா எதுவும் சொல்லாமல் போனை வைத்து விட்டார். விடாமல் முத்து போன் செய்து கொண்டே இருந்தார். மறுநாள் காலையில் போதை தெளிந்தவுடன் முத்து, மீனா பெயரை சொல்லி கத்திக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை, நேற்று நடந்த விஷயத்தை மறந்து விட்டாயா? நீதானே மீனாவை வீட்டை விட்டு துரத்தினாய் என்று சொன்னவுடன் முத்து எனக்கு தெரியும் என்றார். அதற்குப்பின் விஜயா, மீனாவின் பெயரை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
உடனே விஜயா, ரோகினையை காபி போட சொன்னார். ரோகினி போட்ட காபி குடித்தவுடன் விஜயா கீழே துப்பிவிட்டு இதெல்லாம் ஒரு காஃபியா? இந்த வீட்டு வேலைக்காரியிடம் கற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்று திட்டினார். உடனே முத்து, மீனா என் பொண்டாட்டி. அவள் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது. அவளைப் பற்றி அவமரியாதயாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றவுடன் விஜயா ஷாக் ஆகினார். பின் விஜயா, மீண்டும் மோசமாக மீனாவை பற்றி பேசி இருந்தார். இதனால் ,கொந்தளித்த முத்து நான் என் மனைவியை என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன். நீங்கள் அவளைப் பற்றி தவறாக பேசக்கூடாது. என் மனைவிக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் நீங்கள் யாரும் தலையிடக்கூடாது என்று சொன்னவுடன் விஜயா வாயை பிளந்து விட்டார்.
https://www.youtube.com/watch?v=GNWX_zOcdu4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வீட்டில் சமையல் செய்வதற்கு ஆள் இல்லை என்று ரோகினி ஒருவரை அழைத்து வருகிறார். அவருடைய சாப்பாட்டை சாப்பிட்டு விஜயா, அண்ணாமலை எல்லோருமே காரம் தாங்க முடியாமல் கத்துகிறார்கள். உடனே கோபத்தில் விஜயா, இவளை ஒழுங்கு மரியாதையாக வெளியே அனுப்பு. இதெல்லாம் சாப்பாடா? என்று திட்டுகிறார். இதையெல்லாம் கேட்ட முத்து, இப்போது தெரியுதா மீனாவின் அருமை என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை, இல்லாத போது தான் ஒருவர் அருமை தெரியும் என்கிறார்.






