விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தினேஷ், நீ பணம் கொடுக்கவில்லை என்றால் நான் முத்துவிடமே சொல்லுவேன் என்று மிரட்டுகிறார். ரோகினி, என்னிடம் பணம் இல்லை. ஆனால் யாரிடமும் சொல்லாதீர்கள். முத்துயிடம் சொல்ல வேண்டாம் என்றெல்லாம் நடித்தார். கோபத்தில் தினேஷ் முத்துவிடம் சொல்வதற்காக கிளம்பினார். அதற்குப்பின் மனோஜ் பார்த்த பெண் சந்தியா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் எல்லோரையும் அண்ணா என்று கூப்பிட்டார். மனோஜ் உள்ளுக்குள்ளே வேதனை தாங்க முடியாமல் குமறுகிறார். வீட்டில் எல்லோரிடமும் கலகலப்பாக சந்தியா பேசி இருந்தார்.

முத்துவிற்கு தவணை முறையில் வேனை அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் வாங்கி தந்தார்கள். இதனால் முத்து-மீனா இருவரும் சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் மேனேஜர் தினேஷ், முத்துவை சந்தித்து ரோகிணி பற்றிய எல்லா உண்மையும் சொன்னார். இதைக் கேட்டு முத்துவிற்கு சிரிப்புதான் வருகிறது. பின் தினேஷ், இவ்வளவு பெரிய விஷயத்தை சொன்னதற்கு எனக்கு பார்த்து கவனியுங்கள் என்றார்.
சிறகடிக்க ஆசை:
உடனே முத்து நண்பர்கள் தினேஷை ஒரு ரூமிற்கு அழைத்து சென்றார்கள். அங்கு முத்துவும் அவருடைய நண்பர்களும் தினேஷை வெளுத்து கட்டுகிறார்கள். அதற்குப்பின் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து பேசினார்கள். அப்போது வக்கீல், நீங்கள் மனோஜ்க்கு இரண்டாவது திருமணம் ஏற்பாடு செய்தல் உங்களை போலீஸ் தான் கைது செய்வார்கள். தேவையில்லாமல் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று சொன்னார். இதைக் கேட்டு முத்து சிரிக்கிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலையின் பிறந்தநாள் என்றவுடன் நண்பர் வீட்டிற்கு வந்து இருக்கிறார். ஆனால், அண்ணாமலை வீட்டில் யாருக்குமே பிறந்தநாள் ஞாபகமே இல்லை. விஜயா, மனோஜ், ரவி எல்லோருமே அண்ணாமலை பிறந்த நாளை மறந்து இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து முத்து, மீனா இருவரும் மேலத்தாலத்துடன் அண்ணாமலையின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை சொல்கின்றார்கள். அதை பார்த்து அண்ணாமலைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பின் தன் மகன் கொடுத்த துணியை அணிந்து கேக் வெட்டி அண்ணாமலை கொண்டாடுகிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, அண்ணாமலைக்கு வாழ்த்து சொல்கிறார். கோபத்தில் விஜயா திட்டி அனுப்புகிறார். அதற்குப்பின் கோவிலில் முத்து தான் வாங்கிய புது வேனுக்கு பூஜை செய்து எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார். எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். பின் சீதாவின் கழுத்தில் இருந்து தாலியை யாரோ எடுத்து சென்று விடுகிறார். அதை தெரியாமல் சீதா கோவிலை சுற்றிக் கொண்டிருக்கிறார். பின் தாலியை காணவில்லை என்று சீதா பதறிப் போகிறார்






