விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். பின் மனோஜின் திருமணமும் நின்று விட்டது. அதற்குப்பின் அண்ணாமலை, எதற்காக இப்படி செய்தாய்? என்று கேள்வி கேட்கிறார். விஜயாவும் ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை, கோபத்தில் விஜயாவை அடிக்க சென்றார். முத்து தடுத்து விட்டார். பின் அண்ணாமலை, விஜயாவையும் மனோஜ் திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். விஜயா, மனோஜ் செய்த விஷயத்தை சொல்லி மீனா வருத்தப்பட்டார்.

முத்து, இதை எல்லாம் அவர்கள் செய்வது புதிது கிடையாது. இருவருமே இப்படித்தான் என்று சொன்னார். இன்னொரு பக்கம் சுருதி, ரோகிணி- மனோஜ் இருவருமே காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். இப்போவரையும் ரோகிணி, மனோஜ்காக தான் காத்துக்கொண்டிருந்தார். இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்றார். ரவி, அதெல்லாம் தேவையில்லை. ரோகினி, நிறைய தவறான வேலை செய்திருந்தார் என்றெல்லாம் சொன்னார். மனோஜ், தன்னுடைய திருமணம் நின்று போனது நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் சத்யா, ரேகா இருவரும் முத்துவை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது சத்யா, வீட்டில் பயங்கர பிரச்சினையாக இருக்கிறது என்றார். முத்து, எதுவாக இருந்தாலும் பார்த்து தான் ஆகணும் என்று சமாதானம் செய்தார். பின் முத்து, வரும் வழியில் மீனாவை கத்தியால் குத்திய நபரை பார்த்து விட்டார். பின் முத்து, அந்த நபரை அடித்து வெளுத்து வாங்கி உண்மையை கேட்டார். அந்த நபருமே சிந்தாமணி சொல்லி தான் செய்ய சொன்னேன் என்று உண்மையை ஒற்றுக்கொண்டார். அதற்குப்பின் முத்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விட்டார். சிந்தாமணியை போலீஸ் கைது செய்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனாவை கொலை செய்ய முயற்சித்தது சிந்தாமணி தான் என்று ஆதாரத்துடன் போலீசில் சிக்கிக்கொண்டார் என்று சொல்கிறார். இதை கேட்டு விஜயா ஷாக் ஆகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சிந்தாமணியை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பொய்யான சாட்சியை ரெடி பண்ணி சிந்தாமணியை வெளியே எடுத்து விடுகிறார்கள்.
வெளியே வந்த சிந்தாமணி, பைனான்சியரை அழைத்து கொண்டு நேரடியாக முத்து வீட்டிற்கு வருகிறார். அப்போது எல்லோருமே சிந்தாமணி இடம் சண்டைக்கு போகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அண்ணாமலை, உங்களிடம் சரியாக 30 லட்சத்திற்கு வட்டி கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். எதற்கு வந்திர்கள் என்கிறார். பைனான்சியர், 30 லட்சம் இல்லை மொத்தம் 50 லட்சம் இருக்கிறது. உங்கள் வீட்டு பத்திரத்தை மீட்பதற்காக 18 லட்சம், அதுக்கு பிறகு ஒரு 2 லட்சம் என்று மொத்தம் 50 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் மொத்த வீடுமே அதிர்ந்து போகிறது. விஜயா- மனோஜ் செய்த பித்தலாட்ட வேலையை பைனாஸியர் சொல்கிறார். இதனால் அண்ணாமலை கோபப்பட்டு மனோஜை அடி வெளுத்து வாங்குகிறார். வலி தாங்க முடியாமல் மனோஜ், இதையெல்லாம் அம்மா சொல்லி தான் செய்தேன் என்று சொல்கிறார். பைனான்சியர், உங்க பிரச்சனையை அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு பதிலை சொல்லுங்கள் என்று சொல்கிறார்.






