விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், நான் நிறைய கடன் வாங்கி இருக்கிறேன். அந்த ஆர்டர் வேண்டும் என்றார். இதனால் கொந்தளித்த விஜயா, மனோஜை அடித்தார். வீட்டில் உள்ள எல்லோருமே மனோஜ் கடன் வாங்கியதற்காக திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் மனோஜ்-விஜயா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜயா, உனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்று சொல். நான் சிந்தாமணியிடம் சொல்லி ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். இதை எல்லாம் கேட்ட மீனா, முத்துவிடம் சொன்னார். அதற்குப்பின் கடைக்கு வந்த ரோகினியை உள்ளே விடாமல் மனோஜின் நண்பரும் பிஏவும் தடுத்தார்கள். ஆனால், ரோகினி கேட்கவில்லை.

மனோஜ், இனிமேல் நீ இங்கே வராதே. உன் மூலமாக வந்த ஆர்டரும் வேண்டாம். ஆடர் மூலம் கிடைத்த பணத்தை நான் தந்து விடுகிறேன். ஒழுங்கு மரியாதையாக கிளம்பு என்றார். இருந்தாலும் ரோகிணி கேட்காமல் நான் உன்னை காதலிக்கிறேன். இருவரும் சேர்ந்து வாழ போகிறோம் என்றெல்லாம் சொன்னார். அதற்குப் பின் பார்வதியின் கதை செல்லும் வீடியோ பிரபலமாகி இருப்பதால் அவருக்கு விருது தருவதாக சொன்னார்கள். இதை கேட்டு விஜயாவிற்கு கோபம் தான் வருகிறது. பின் விஜயாவை பார்க்க சிந்தாமணி வந்தார். அப்போது விஜயா, மனோஜ் வாங்கி இருக்கும் கடனை பற்றி சொல்லி பணம் கேட்டார்.
சிறகடிக்க ஆசை:
சிந்தாமணி, உங்கள் வீட்டு பத்திரத்தை கொடுங்கள். நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். பின் இதைப்பற்றி பேசுவதற்காக விஜயா, மனோஜ் கடைக்கு சென்றார். அங்கு விஜயா, பத்திரத்தை எடுப்பதற்கு அப்பா கையெழுத்து போட்ட மாதிரி பணத்தை வாங்குவதற்கும் போட்டு விடு. நீ இந்த கடன் தொல்லையிலிருந்து நீங்கி நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்றார். மனோஜும் தன் அம்மா சொல்வதற்கு ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் ரவி, ஸ்ருதியின் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது போன் செய்த நீத்து ஆர்டர் சொன்னார். ரவியும் ஆர்டரை எடுத்துக்கொண்டு இருந்தார். இதை பார்த்து சுருதிக்கு கடுப்பானது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், பேங்கில் புதிதாக அக்கவுண்ட் ஓபன் பண்ணுவதால் நீங்கள் கையெழுத்து ஒன்று போடணும் என்று கேட்கிறார். அண்ணாமலை, எதற்கு? ஏன்? என்றெல்லாம் கேட்கிறார். மனோஜ், விஜயா இருவரும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். முத்துவும் திருப்பி திருப்பி கேள்வி கேட்பதால் மனோஜ் பதிலளித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை கையெழுத்து போட வரும் போது மீனா தும்பி விடுகிறார். இருந்தாலும் மனோஜ், விஜயா இருவரும் அண்ணாமலையை கையெழுத்து போட வைத்து விடுகிறார்கள். பின் ரூமில் மனோஜ், அண்ணாமலை கையெழுத்து போட்ட பேப்பரை வைத்துக்கொண்டு பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் கிரிஷ்க்கு உடம்பு சரியில்லாததால் ரோகினி, சிந்தாமணியிடம் உதவி கேட்கிறார். சிந்தாமணி டாக்டரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அதற்கு பின் சிந்தாமணி, உன் மாமியார் மனோஜ்க்கு வேறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். ஏதாவது செய்து மனோஜை உன் பக்கம் கொண்டுவர பார் என்றெல்லாம் ஏத்தி விடுகிறார். ரோகிணியும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் முத்து, அருனிடம் பேசுவதற்கு செல்வம் என்னை அழைக்கிறான். நான் போய் பார்த்து பேசுகிறேன் என்று சொல்கிறார். மீனா, பிரச்சனை பெரிசாகும் வேண்டாம் என்று சொல்கிறார். இருந்தாலும் முத்து கேட்கவில்லை. பின் இதைப்பற்றி மீனா, சீதாவிடம் சொல்கிறார். சீதா, பயமாக இருக்கிறது என்று தன் அக்காவிடம் புலம்பி கொண்டிருக்கிறார்






