விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், நான் யாரையும் சந்தித்து பேச முடியாது. யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று திமிராக பேசி இருந்தார். முத்துவிற்கு கோபம் தான் வருகிறது அதற்குப்பின் வீட்டிற்கு ஸ்வேதா வந்தார். அப்போது ஸ்வேதா, மாதர் சங்க தலைவியை பற்றி இப்போதுதான் விசாரித்தேன். அவர்கள் நேரடியாக கோர்ட்டு போக மாட்டார்கள். உங்கள் வீட்டின் முன்பு பெண்களை வர வைத்து பிரச்சாரம் செய்வார்கள். அதற்குப்பின் உங்கள் அம்மாவையும் உங்களையும் கைது செய்வார்கள். அதற்கு பிறகு தான் கோர்ட்டில் கேஸ் நடக்கும் என்றார். இதை கேட்டு மனோஜ் பயந்து விட்டார்.

ஸ்வேதா, நீங்கள் அந்த தலைவி இடம் பேசவில்லை என்றால் உங்கள் வீட்டில் பல பிரச்சனைகள் வெடிக்கும் என்றெல்லாம் பயமுறுத்தினார்ர். அதனால் பயந்து போன மனோஜ், போலீஸ் தன்னையும் தன் அம்மாவையும் கைது செய்வது போல கனவு கண்டு கத்துகிறார். பின் மனோஜ், நான் தலைவியிடம் பேச வருகிறேன் என்று சொன்னார். பின் மாதர் சங்க தலைவியை முத்து- மீனா- மனோஜ் சந்தித்து பேசினார்கள். அப்போது மனோஜ், என் வாழ்க்கையில் நான் ரோகினியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். அவளுடன் கடைசி வரையும் சந்தோசமாக வாழனும் என்று நினைத்தேன். ஆனால், அவள் எனக்கு மிகப்பெரிய வலியையும் துரோகத்தையும் செய்து விட்டாள்.
சிறகடிக்க ஆசை:
அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லவில்லை என்று நடந்தது எல்லாவற்றையும் சொன்னார். அதைக் கேட்டு மாத சங்கத் தலைவி ஷாக் ஆகினார். முத்து, ரோகினியின் பித்தலாட்ட வேலை எல்லாம் சொன்னார். இதனால் கோபப்பட்ட மாத சங்கத் தலைவி, இனி நாங்கள் ரோகிணிக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்றார். அந்த சமயம் வந்த ரோகிணியை தலைவியை திட்டி அனுப்புகிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து நடந்தது எல்லாம் சொன்னார். அண்ணாமலை ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மாதர் சங்க தலைவியின் பிரச்சனையில் இருந்து காப்பாற்றியதற்காக மனோஜ் நன்றி சொல்கிறார். அதை பார்த்து முத்துவிற்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. அதற்குப்பின்
பூக்கடை வியாபார சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நிற்க சொல்லி சிந்தாமணியிடம் பேசுகிறார்கள். சிந்தாமணி, எனக்கு பதவி ஆசை இல்லை, வேண்டாம் என்று நடிக்கிறார். இருந்தாலும் அங்கிருந்தவர்கள் தேர்தலில் நிற்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். சிந்தாமணியும் தேர்தலில் நிற்க ஒத்து கொள்கிறார். இன்னொரு பக்கம் மீனாவை தேர்தலில் நிற்க சொல்லி அவருடைய தோழிகள் எல்லோரும் சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
மீனா, வேண்டாம் என்று சொன்னார். ஆனால், முத்து-மீனாவின் தோழிகள் எல்லோருமே கட்டாயப்படுத்தி தேர்தலில் நிற்க மீனா ஒத்துக்க வைக்கிறார்கள். பின் இதைப்பற்றி மீனா தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார். மீனாவின் அம்மா, சிந்தாமணி எதிர்த்து போட்டியிட முடியுமா? எதற்கு இந்த பிரச்சனை? என்று கேட்கிறார். முத்து, அதெல்லாம் முடியாது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் மீனா தன்னை எதிர்த்து போட்டியிடுவதை அறிந்த சிந்தாமணி கோபப்படுகிறார். அதற்குப்பின் விஜயாவை சந்தித்து இதை பற்றி சிந்தாமணி சொல்கிறார். மீனா இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களை மதிக்க மாட்டாள் என்றெல்லாம் ஒண்ணுக்கு ரெண்டாக ஏற்றி விடுகிறார் சிந்தாமணி.






