விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்து தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார்.
ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஒரு வழியாக ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா.
சிறகடிக்க ஆசை சீரியல்:
இதை பார்த்து முத்து, மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் விஜயாவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. மனோஜ் வேலை இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மீனாவின் தம்பி சத்யா கல்லூரியில் படித்து வேலை செய்வதாக வீட்டில் பொய் சொல்லி சிட்டி உடன் தேவையில்லாத சவகாசம் வைத்துக்கொண்டு இருக்கிறார். இது முத்துவிற்கு தெரிய வருகிறது. ஆனால், சத்யா திமிராக முத்துவிடம் பேசுகிறான். இதனால் சிட்டி- முத்து இடையே ப்ரச்சனை ஏற்படுகிறது. பின் நண்பர்களுக்காக முத்து தன் காரை விற்று ஆட்டோ ஓட்டுகிறார். இந்த உண்மை வீட்டுக்கு தெரிகிறது.
சீரியல் கதை:
மேலும், இந்த வாரம் எபிசோடில் முத்துவிற்கு பெரிய மாலை ஆர்டர் கிடைக்கிறது. இதை முத்து மீனாவிடம் சொல்கிறார். வழக்கம்போல் இது விஜயா, ரோகினி, மனோஜ்க்கு இது பிடிக்கவில்லை. மூவரும் சேர்ந்து கொண்டு மற்றவர்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவழியாக வெற்றிகரமாக மீனா 500 மாலை ஆர்டரை செய்து கொடுக்கிறார். ஆனால், சிட்டி திட்டம் மாலை இருந்த வண்டியை கடத்தி விடுகிறார். பின் பல போராட்டங்களுக்குப் பிறகு முத்து வண்டியை கண்டுபிடித்து சரியான நேரத்தில் ஆர்டரை ஒப்படைக்கிறார். இதனால் முத்து-மீனா இருவருமே சந்தோஷத்தில் இருக்கிறார்கள். மேலும், மீனா தன்னுடைய கணவருக்கு எப்படியாவது கார் வாங்கி தர வேண்டும் என்று ஆசை படுகிறார்.
நேற்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் ரோகிணி பார்லரின் பெயரை மாற்றிய விஷயம் விஜயாவிற்கு தெரிந்து பயங்கரமாக கோபப்பட்டு ரோகிணியை திட்டுகிறார். மேலும், இன்றைய எபிசோடில் மீனா ஆசைப்பட்டபடி முத்துவிற்கு சர்ப்ரைஸ் ஆக கார் வாங்கிக் கொடுக்கிறார். முத்து சந்தோஷத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார். நல்லபடியாக காருக்கு பூஜை போட்டு மீனா-முத்து இருவருமே வீட்டிற்கு காரை எடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து ஆட்டோ ஓட்டுவதை குறித்து கிண்டல் செய்து மனோஜ் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து மீனா- முத்து இருவரும் வீட்டிற்கு வந்து தங்கள் வாங்கிய காரை காண்பித்துடன் வாயை பிளந்து நிற்கிறார் மனோஜ்.
இன்றைய எபிசோட்:
பின் அவர், இது செகண்ட் ஹாண்ட் கார் ஒன்னு, ரெண்டு லட்சம் போகும் என்று சொன்னவுடன் ஒரு லட்சம் கூட இருக்கட்டும் அது என்னுடைய மனைவி கஷ்டப்பட்டு எனக்காக வாங்கி தந்தது. இதே என் மனைவி மலேசியாவில் இருந்தால் அவள் பத்து லட்சத்தில் கூட வாங்கித் தந்திருப்பார் என்று முத்து சொல்கிறார். இதை கேட்டு விஜயா, ரோகினியை பார்க்கிறார். ரோகினி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நிற்கிறார். பின் ரோகிணியை அழைத்து, நீ ஏன் உங்க அப்பா கிட்ட பேச மாட்டுகிறாய்? நீ ஏன் உதவி செய்ய தயங்குகிறாய்? என்று கேட்டவுடன் என்ன சொல்வதென்று புரியாமல் ரோகிணி அமைதியாக நிற்கிறார். இனி வரும் நாட்களில் ரோகினி மனோஜிற்கு பண ஏற்பாடு செய்து கொடுப்பாரா? ரோகினியின் உண்மை முகம் தெரிய வருமா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.