விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, பாரில் பயங்கரமாக குடித்துவிட்டு மீனா செய்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர், மீனா ஓடிப் போய்விட்டாளா? என்று மோசமாக பேசி இருந்தார். அதனால் கோபப்பட்ட முத்து, அவரிடம் சண்டை போட்டார். அந்த சமயம் பார்த்து மீனா- சீதா இருவருமே பாருக்கு வந்துவிட்டார்கள். முத்துவிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்க, அவர் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் சீதா மண்டபத்தில் இல்லை என்று தெரிந்த அருண் அவருடைய அம்மாவிடம் சண்டை போட்டார். அதற்கு சீதாவின் அம்மா, முத்து இல்லாமல் இந்த திருமணம் நடக்காது என்று சொன்னார்.

உடனே அருண், என்னிடம் சொல்லாமல் சீதா எப்படி போகலாம் என்று சீதாவிற்கு ஃபோன் செய்து கொண்டிருந்தார். ஆனால், சீதா ஃபோனை எடுக்கவில்லை. முத்து மனமும் மாறவில்லை. மண்டபம் முழுக்க கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்று எல்லோருமே தவறாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதனால் அருணுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மீனாவின் அம்மா, முத்து வரவைக்கும் திருமணம் நடக்காது என்பதில் உறுதியாக இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அதிகாரிகள் எல்லாரும் வருவதால் அருணால் எதுவுமே பேச முடியவில்லை. இதனால் கோபத்தில் அருண், மண்டபத்தில் இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று வெளியே கிளம்பப் பார்த்தார். உடனே அண்ணாமலை, எல்லா தவறும் நீங்கள் செய்துவிட்டு பெண் வீட்டிற்கு தண்டனை கொடுப்பது சரி இல்லை. பொறுமையாக தான் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்தார். இதனால் அருணுமே அமைதியாகி விட்டார். அதற்குப் பின் செல்வம், முத்துவை மண்டபத்திற்கு அழைத்து வந்தார். சீதா- மீனா இருவருமே மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள். முத்துவின் நிலைமையை பார்த்து மண்டபத்தில் உள்ள எல்லோருமே கேவலமாகவும் தவறாகவும் பேசி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:
ஒரு வழியாக சீதா-அருண் கல்யாணம் நடந்தது. அப்போது முத்து, சீதா அழுததால் தான் நான் இங்கு வந்தேன். இனிமேல் உன் குடும்பத்தில் எந்த ஒரு விஷயம் என்றாலும் நான் தலையிட மாட்டேன். உன் வீட்டிற்கும் வரமாட்டேன். நீயும் என் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே முத்து செய்த வேலையையும் மீனா குடும்பத்தையும் பற்றியும் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அண்ணாமலை, மீனா குடும்பத்திற்கு தான் சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அந்த சமயம் வந்த முத்து போதையில் உளறிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா செய்த துரோகத்தை நினைத்து முத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து மீனா வீட்டிற்கு வருகிறார். மீனாவை பார்த்தவுடன் முத்து கோபப்பட்டு பயங்கரமாக திட்டுகிறார். வீட்டை விட்டு வெளியே போ என்றெல்லாம் சொல்கிறார். ஆனால், மீனா எதுவும் பேசாமல் அண்ணாமலையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அதற்கு அண்ணாமலை, நீ இப்படி செய்வ என்று நான் எதிர்பார்க்கவில்லை என்கிறார். உடனே மீனா, சீதா-அருண் திருமணம் செய்ததற்கான காரணத்தைப் பற்றி சொல்லி ரொம்பவே எமோஷனலாக அழுது இருந்தார். அதோடு தான் செய்தது மிகப்பெரிய தவறுதான் என்று சொல்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயா, மனோஜ், ரோகினி மூவருமே முத்துவும் மீனாவையும் பிரிப்பதற்காக
சதி வேலைகளை செய்கிறார்கள். ஆனால், சுருதி- ரவி இருவருமே மீனாவிற்கு சப்போர்ட் செய்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பின் மாற்றி மாற்றி எல்லோருமே வாக்குவாதம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் முத்து, இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடக்கும் பிரச்சனை. யாரும் தலையிட தேவையில்லை. நீ வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார். இதனால் மீனா எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறார். இன்னொரு பக்கம் அருண், என்ன இருந்தாலும் நீ முத்துவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மண்டபத்தை விட்டு போயிருக்கக் கூடாது என்று பேசுகிறார். அந்த சமயம் பார்த்து மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனாவின் அம்மா, உன் தங்கை வாழ்க்கைக்காக உன்னுடைய வாழ்க்கையை இழந்து விட்டாயே என்று ரொம்ப எமோஷனலாக அழுது புலம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






