விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சுருதி, ரவியை திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அண்ணாமலை வாக்கிங் வந்து கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக பைக்கை ஓட்டி வந்த நபர் அண்ணாமலை மீது மோதி விட்டார். இதனால் அண்ணாமலை, ஹாஸ்பிடலில் இருக்கிறார். இதை அறிந்த மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு சென்று விட்டார்கள். விஜயா, இது தான் சந்தர்ப்பம் என்று மீனாவின் ராசியை, குணத்தையும் ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். மீனா ரொம்ப உடைந்து விட்டார்.

விஜயா ரொம்ப மோசமாக மீனாவை திட்டி கொண்டிருந்தார். ரவி, முத்து எவ்வளவோ தடுத்துமே விஜயா கேட்கவில்லை. மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விஜயா சொன்னார். இதனால் உடைந்து போன மீனா, ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பி விட்டார். பின் தன்னுடைய பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, ரோகினி இடம் நடந்ததை எல்லாம் சொன்னார். பின் விஜயாவிற்கு போன் செய்த சிந்தாமணி, மீனாவால் தான் இந்த பிரச்சனை என்று ஏற்றி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் விஜயாவும் ரொம்பவே பதறுகிறார். பின் அண்ணாமலை கண்விழித்து விட்டார். அப்போது எல்லோருமே அண்ணாமலையை பார்த்து பேசி இருந்தார்கள். முத்து நடந்ததை சொன்னார். விஜயா, மீனாவின் மீது தான் கோபப்பட்டார். பின் அண்ணாமலையின் உடல் நிலைக்காக முத்து எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் அம்மாவிற்கு வீட்டிற்கு வந்த மீனா, நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனலாக கதறி அழுதார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலையை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். அண்ணாமலை, மீனா எங்கே? என்று கேட்கிறார். அம்மா வீட்டிற்கு சென்றதை விஜயா சொல்லி விடுகிறார். மீனா இங்கு வர கூடாது என்று விஜயா-மனோஜ் இருவரும் பிடிவாதமாக இருக்கிறார்கள். அண்ணாமலை, எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. அதற்குப்பின் முத்து, மீனாவை அழைப்பதற்காக வருகிறார். மீனா, நான் வரவில்லை. என்னால் மாமாவுக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம்.

சீரியல் ட்ராக்:
அத்தையின் பயம் போகட்டும். அதற்குப் பிறகு வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்கிறார். அதனால் முத்து எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் அண்ணாமலையை பார்ப்பதற்காக ஸ்ருதி வீட்டிற்கு வருகிறார். சுருதியை பார்த்தவுடன் விஜயாவிற்கு சந்தோசம். மீனா வீட்டில் இல்லாததை அறிந்த சுருதி மூடநம்பிக்கையில் இப்படி எல்லாம் நடந்து கொள்வதா? உங்கள் பயம் தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் என்றெல்லாம் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், விஜயா கேட்பதாகவே இல்லை.






