விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து நண்பர்கள் தினேஷை ஒரு ரூமிற்கு அழைத்து சென்றார்கள். அங்கு முத்துவும் அவருடைய நண்பர்களும் தினேஷை வெளுத்து கட்டுகிறார்கள். அதற்குப்பின் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து பேசினார்கள். அப்போது வக்கீல், நீங்கள் மனோஜ்க்கு இரண்டாவது திருமணம் ஏற்பாடு செய்தல் உங்களை போலீஸ் தான் கைது செய்வார்கள். தேவையில்லாமல் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று சொன்னார். இதைக் கேட்டு முத்து சிரிக்கிறார்.

அண்ணாமலையின் பிறந்தநாள் என்றவுடன் நண்பர் வீட்டிற்கு வந்து இருந்தார். ஆனால், அண்ணாமலை வீட்டில் யாருக்குமே பிறந்தநாள் ஞாபகமே இல்லை. விஜயா, மனோஜ், ரவி எல்லோருமே அண்ணாமலை பிறந்த நாளை மறந்து இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து முத்து, மீனா இருவரும் மேலத்தாலத்துடன் அண்ணாமலையின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை சொல்கின்றார்கள். அதை பார்த்து அண்ணாமலைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பின் தன் மகன் கொடுத்த துணியை அணிந்து கேக் வெட்டி அண்ணாமலை கொண்டாடினார்.
சிறகடிக்க ஆசை:
அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, அண்ணாமலைக்கு வாழ்த்து சொன்னார். கோபத்தில் விஜயா திட்டி அனுப்பினார். அதற்குப்பின் கோவிலில் முத்து தான் வாங்கிய புது வேனுக்கு பூஜை செய்து எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார். எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். பின் சீதாவின் கழுத்தில் இருந்து தாலியை யாரோ எடுத்து சென்று விட்டார். அதை தெரியாமல் சீதா கோவிலை சுற்றிக் கொண்டிருந்தார். பின் தாலியை காணவில்லை என்று சீதா பதறிப் போனார்

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதாவின் தாலியை திருடி கொண்டு போன நபரை பின்தொடர்ந்து மீனா செல்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபரை மீனா பிடித்து விடுகிறார். அவர் விஜயா அழைத்து வந்த போலி சாமியார் தான் என்று தெரிந்ததும் மீனா ஷாக் ஆனார். அந்த நபர் மீனாவை தள்ளிவிட்டு தப்பித்து விடுகிறார். அதற்கு பின் கோயிலுக்கு வந்த மீனா, அந்த போலி சாமியார் தான் செயினை திருடி சென்றார் என்ற நடந்ததை எல்லாம் சொல்கிறார். விஜயா ஏற்றுக்கொள்ளவே இல்லை. வீட்டில் உள்ள எல்லோருமே மீனாவிற்கு துணையாக நிற்கிறார்கள். ஆனால், விஜயா மட்டும் இந்த விஷயத்தில் மீனா பொய் சொல்கிறார் என்றார்.

சீரியல் ட்ராக்:
கோபத்தில் முத்து, அந்த சாமியார் போலி என்று நிரூபிக்கிறேன்னு சவால் விடுகிறார். அதற்குப் பின் சீதா தாலி தொலைத்த விஷயத்தை அருணிடம் சொல்லி அழுகிறார். அருண், கோபத்தில் சீதாவின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் அடித்து தாலியோடு வா என்று வீட்டை விட்டு துரத்துகிறார். சீதாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் அந்த போலி சாமியார் தொலைத்த பர்ஸை வைத்து அந்த இடத்துக்கு போகிறார்கள். அங்கு முத்துவிற்கு தெரிந்தவர் இருக்கிறார். அவரின் மூலம் அந்த சாமியாரை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.






