விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, மீனாவிற்காக தங்க தாலி செயினை வாங்கி தந்தார். வழக்கம் போல விஜயா ஏளனம் செய்தார். அந்த சமயம் பார்த்து ஹரணியின் குடும்பம் வந்தார்கள். அப்போது ஸ்வேதா, நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நினைத்து பார்க்கவில்லை என்றார். ஹரணியின் அப்பா, அம்மா இருவருமே அண்ணாமலையை பார்த்து நீங்களும் இவ்வளவு பெரிய பொய் பித்தலாட்டம் செய்வீர்கள் என்று நினைக்கவில்லை என்று ரொம்ப மோசமாக பேசி விட்டார்கள். இதனால் அண்ணாமலைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

ஹரிணி, உங்களுக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை. மாதம் மனோஜ், ரோகிணிக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டில் ஆர்டர் போட்டு இருந்தார்கள். அதோட ரோகிணி, மனோஜை ரொம்பவே காதலிக்கிறார். அவளுடனே சேர்ந்து வாழுங்கள் என்று சொன்னார். வீட்டில் உள்ள யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. அரணியின் அப்பா மீண்டும் மீண்டும் அண்ணாமலையை தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
ஒரு கட்டத்தில் அண்ணாமலை, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். பின் மனோஜின் திருமணமும் நின்று விட்டது. அதற்குப்பின் அண்ணாமலை, எதற்காக இப்படி செய்தாய்? என்று கேள்வி கேட்கிறார். விஜயாவும் ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை, கோபத்தில் விஜயாவை அடிக்க சென்றார். முத்து தடுத்து விட்டார். பின் அண்ணாமலை, விஜயாவையும் மனோஜ் திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் விஜயா, மனோஜ் செய்த விஷயத்தை சொல்லி மீனா வருத்தப்படுகிறார். முத்து, இதை எல்லாம் அவர்கள் செய்வது புதிது கிடையாது. இருவருமே இப்படித்தான் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் சுருதி, ரோகிணி- மனோஜ் இருவருமே காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். இப்போவரையும் ரோகிணி, மனோஜ்காக தான் காத்துக்கொண்டிருக்கிறார். இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்று சொல்கிறார். ரவி, அதெல்லாம் தேவையில்லை. ரோகினி, நிறைய தவறான வேலை செய்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார். மனோஜ், தன்னுடைய திருமணம் நின்று போனது நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சத்யா, ரேகா இருவரும் முத்துவை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது சத்யா, வீட்டில் பயங்கர பிரச்சினையாக இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார். முத்து, எதுவாக இருந்தாலும் பார்த்து தான் ஆகணும் என்று சமாதானம் செய்கிறார். பின் முத்து, வரும் வழியில் மீனாவை கத்தியால் குத்திய நபரை பார்த்து விடுகிறார். பின் முத்து, அந்த நபரை அடித்து வெளுத்து வாங்கி உண்மையை கேட்கிறார். அந்த நபருமே சிந்தாமணி சொல்லி தான் செய்ய சொன்னேன் என்று உண்மையை ஒற்றுக்கொள்கிறார். அதற்குப்பின் முத்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விடுகிறார். சிந்தாமணியை போலீஸ் கைது செய்கிறார்கள்






