விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அதிகாரிகள் எல்லாரும் வருவதால் அருணால் எதுவுமே பேச முடியவில்லை. இதனால் கோபத்தில் அருண், மண்டபத்தில் இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று வெளியே கிளம்பப் பார்த்தார். உடனே அண்ணாமலை, எல்லா தவறும் நீங்கள் செய்துவிட்டு பெண் வீட்டிற்கு தண்டனை கொடுப்பது சரி இல்லை. பொறுமையாக தான் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்தார். இதனால் அருணுமே அமைதியாகி விட்டார். அதற்குப் பின் செல்வம், முத்துவை மண்டபத்திற்கு அழைத்து வந்தார். சீதா- மீனா இருவருமே மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள். முத்துவின் நிலைமையை பார்த்து மண்டபத்தில் உள்ள எல்லோருமே கேவலமாகவும் தவறாகவும் பேசி இருந்தார்கள்.

ஒரு வழியாக சீதா-அருண் கல்யாணம் நடந்தது. அப்போது முத்து, சீதா அழுததால் தான் நான் இங்கு வந்தேன். இனிமேல் உன் குடும்பத்தில் எந்த ஒரு விஷயம் என்றாலும் நான் தலையிட மாட்டேன். உன் வீட்டிற்கும் வரமாட்டேன். நீயும் என் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே முத்து செய்த வேலையையும் மீனா குடும்பத்தையும் பற்றியும் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அண்ணாமலை, மீனா குடும்பத்திற்கு தான் சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அந்த சமயம் வந்த முத்து போதையில் உளறிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனா செய்த துரோகத்தை நினைத்து முத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் மீனா வீட்டிற்கு வர, முத்து கோபப்பட்டு பயங்கரமாக திட்டி இருந்தார். ஆனால், மீனா எதுவும் பேசாமல் அண்ணாமலையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு அண்ணாமலை, நீ இப்படி செய்வ என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார். உடனே மீனா, சீதா-அருண் திருமணம் செய்ததற்கான காரணத்தைப் பற்றி சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயா, மனோஜ், ரோகினி மூவருமே முத்துவும், மீனாவையும் பிரிப்பதற்காக சதி வேலைகளை செய்தார்கள்.

நேற்று எபிசோட்:
ஒரு கட்டத்தில் முத்து, இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடக்கும் பிரச்சனை. யாரும் தலையிட தேவையில்லை. நீ வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னார். இதனால் மீனா எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். இன்னொரு பக்கம் அருண், என்ன இருந்தாலும் நீ முத்துவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மண்டபத்தை விட்டு போயிருக்கக் கூடாது என்று பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தார். அப்போது மீனாவின் அம்மா, உன் தங்கை வாழ்க்கைக்காக உன்னுடைய வாழ்க்கையை இழந்து விட்டாயே என்று ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மொட்டை மாடியில் மனோஜ், உன் பொண்டாட்டி இதைத் தவிர உன்னிடம் என்னவெல்லாம் மறந்தாள் என்று கேட்டுப்பார் என்கிறார். முத்துவுமே மீனாவிற்கு போன் செய்து என்னிடம் என்ன மறைத்தாய்? என்று கேட்கிறார். ஆனால், மீனா எதுவும் சொல்லாமல் போனை வைத்து விடுகிறார். விடாமல் முத்து போன் செய்து கொண்டே இருக்கிறார். மறுநாள் காலையில் போதை தெளிந்தவுடன் முத்து, மீனா பெயரை சொல்லி கத்திக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை, நேற்று நடந்த விஷயத்தை மறந்து விட்டாயா? நீதானே மீனாவை வீட்டை விட்டு துரத்தினாய் என்று சொன்னவுடன் முத்து எனக்கு தெரியும் என்கிறார். அதற்குப்பின் விஜயா, மீனாவின் பெயரை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். உடனே அண்ணாமலை, உனக்கும் எல்லாம் மறந்து விட்டதா? என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே விஜயா, ரோகினையை காபி போட சொல்கிறார். ரோகினி போட்ட காபி குடித்தவுடன் விஜயா கீழே துப்பிவிட்டு இதெல்லாம் ஒரு காஃபியா? இந்த வீட்டு வேலைக்காரியிடம் கற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்று திட்டுகிறார். உடனே முத்து, மீனா என் பொண்டாட்டி. இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது. அவளைப் பற்றி அவமரியாதயாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றவுடன் விஜயா ஷாக் ஆகினார். பின் விஜயா,
மீண்டும் மோசமாக மீனாவை பற்றி பேசுகிறார். இதனால் ,கொந்தளித்த முத்து நான் என் மனைவியை என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன். நீங்கள் அவளைப் பற்றி தவறாக பேசக்கூடாது. என் மனைவிக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் நீங்கள் யாரும் தலையிடக்கூடாது என்று சொன்னவுடன் விஜயா வாயை பிளந்து விடுகிறார். இதெல்லாம் கேட்டு சுருதி, முத்துவை பாராட்டுகிறார். ரோகினிக்கு மனோஜ் மீது கோபம் வருகிறது.இத்துடன் சீரியல் முடிகிறது






