விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, அண்ணாமலைக்கு வாழ்த்து சொன்னார். கோபத்தில் விஜயா திட்டி அனுப்பினார். அதற்குப்பின் கோவிலில் முத்து தான் வாங்கிய புது வேனுக்கு பூஜை செய்து எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார். எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். பின் சீதாவின் கழுத்தில் இருந்து தாலியை யாரோ எடுத்து சென்று விட்டார். அதை தெரியாமல் சீதா கோவிலை சுற்றிக் கொண்டிருந்தார். பின் தாலியை காணவில்லை என்று சீதா பதறிப் போனார்

சீதாவின் தாலியை திருடி கொண்டு போன நபரை பின்தொடர்ந்து மீனா சென்றார். ஒரு கட்டத்தில் அந்த நபரை மீனா பிடித்து விட்டார். அவர் விஜயா அழைத்து வந்த போலி சாமியார் தான் என்று தெரிந்ததும் மீனா ஷாக் ஆனார். அந்த நபர் மீனாவை தள்ளிவிட்டு தப்பித்து விட்டார். அதற்கு பின் கோயிலுக்கு வந்த மீனா, அந்த போலி சாமியார் தான் செயினை திருடி சென்றார் என்ற நடந்ததை எல்லாம் சொன்னார். விஜயா ஏற்றுக்கொள்ளவே இல்லை. வீட்டில் உள்ள எல்லோருமே மீனாவிற்கு துணையாக நிற்கிறார்கள். ஆனால், விஜயா மட்டும் இந்த விஷயத்தில் மீனா பொய் சொல்கிறார் என்றார்.
சிறகடிக்க ஆசை:
கோபத்தில் முத்து, அந்த சாமியார் போலி என்று நிரூபிக்கிறேன்னு சவால் விட்டார். அதற்குப் பின் சீதா தாலி தொலைத்த விஷயத்தை அருணிடம் சொல்லி அழுதார். அருண், கோபத்தில் சீதாவின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் அவளை அடித்து தாலியோடு வா என்று வீட்டை விட்டு துரத்துகிறார். சீதாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் அந்த போலி சாமியார் தொலைத்த பர்ஸை வைத்து அந்த இடத்துக்கு போனார்கள். அங்கு முத்துவிற்கு தெரிந்தவர் இருந்தார். அவரின் மூலம் அந்த சாமியாரை கண்டுபிடிக்க முயற்சித்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதா அழுது கொண்டே தன்னுடைய அம்மா வீட்டிற்கு வருகிறார்.
மீனாவின் அம்மா விசாரிக்கிறார். அப்போது சீதா நடந்ததை எல்லாம் சொல்லி தாலிச் செயின் இருந்தால் தான் வீட்டிற்கு போக முடியும் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் அந்த திருடியை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் திருடிய நகை உருக்கும் இடத்திற்கு முத்து, மீனா செல்கிறார்கள். அங்கு அவர்கள் தாங்கள் நகை திருடுபவர்கள் என்றும், எங்களுடைய நகையும் உருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் முத்து-மீனா சொல்வதை நம்பவில்லை.

சீரியல் ட்ராக்:
ஒரு கட்டத்தில் அவர்கள் நம்பி விடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து போலீஸ் அங்கு வந்து விடுகிறார்கள்.
நகை திருடுபவர்கள் எல்லாரையும் போலீஸ் கைது செய்கிறார்கள். அவர்களுடன் முத்து,மீனாவையும் கைது செய்கிறார்கள். முத்து, தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ் ஸ்டேஷனில் முத்து தன்னுடைய குடும்பத்தை பற்றி எல்லாம் சொல்கிறார். பின் போலீஸ், அண்ணாமலைக்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷன் வந்த ரவி, ஸ்ருதி இருவரும் முத்து, மீனாவை பற்றி எல்லாம் சொல்கிறார்கள். ஆனால், போலீஸ் நம்பவில்லை.






