விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், உன் பொண்டாட்டி இதைத் தவிர உன்னிடம் என்னவெல்லாம் மறந்தாள் என்று கேட்டுப்பார் என்றார். முத்துவுமே மீனாவிற்கு போன் செய்து என்னிடம் என்ன மறைத்தாய்? என்று கேட்டார். ஆனால், மீனா எதுவும் சொல்லாமல் போனை வைத்து விட்டார். விடாமல் முத்து போன் செய்து கொண்டே இருந்தார். மறுநாள் காலையில் போதை தெளிந்தவுடன் முத்து, மீனா பெயரை சொல்லி கத்திக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை, நேற்று நடந்த விஷயத்தை மறந்து விட்டாயா? நீதானே மீனாவை வீட்டை விட்டு துரத்தினாய் என்று சொன்னவுடன் முத்து எனக்கு தெரியும் என்றார். அதற்குப்பின் விஜயா, மீனாவின் பெயரை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

உடனே விஜயா, ரோகினையை காபி போட சொன்னார். ரோகினி போட்ட காபி குடித்தவுடன் விஜயா கீழே துப்பிவிட்டு இதெல்லாம் ஒரு காஃபியா? இந்த வீட்டு வேலைக்காரியிடம் கற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்று திட்டினார். உடனே முத்து, மீனா என் பொண்டாட்டி. அவள் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது. அவளைப் பற்றி அவமரியாதயாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றவுடன் விஜயா ஷாக் ஆகினார். பின் விஜயா, மீண்டும் மோசமாக மீனாவை பற்றி பேசி இருந்தார். இதனால் ,கொந்தளித்த முத்து நான் என் மனைவியை என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன். நீங்கள் அவளைப் பற்றி தவறாக பேசக்கூடாது. என் மனைவிக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் நீங்கள் யாரும் தலையிடக்கூடாது என்று சொன்னவுடன் விஜயா வாயை பிளந்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினி, உன் தம்பி மீனா மீது கோபமாக இருந்தாலும் அவளுக்காக சப்போர்ட் செய்து பேசிஇருந்தார். ஆனால், நீ எனக்கு எப்பவுமே சப்போர்ட் செய்வதில்லை என்று வருத்தப்பட்டார். இதனால் மனோஜ் ஆறுதலாக ரோகினி இடம் பேசி இருந்தார். பின் இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் போது விஜயா வந்தார். உடனே ரோகினி ஒளிந்து கொண்டார். அப்போது மனோஜ், நான் போனில் பேசிக் கொண்டிருந்தேன் என்று பொய் சொல்லி சமாளித்தார். அதை நம்பி விஜயா போய் விட்டார்.

நேற்று எபிசோட்:
மனோஜ் தனக்காக சப்போர்ட் செய்தது நினைத்து ரோகினி சந்தோசப்பட்டார். அதற்குப்பின் முத்து, மீனா வீட்டில் இல்லாததால் சாப்பிடாமல் சரியாக தூங்காமல் இருந்தார். இன்னொரு பக்கம் சீதா, தன்னுடைய மாமியார் வீட்டிற்கு கிளம்ப தயாராக இருந்தார். அப்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சீதாவிற்கு அறிவுரை சொன்னார்கள். அதோடு முத்துவை ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்கள். இதையெல்லாம் கேட்டு அருண் மனதுக்குள்ளே கோபப்பட்டார். அதற்குப்பின் முத்து, தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது மீனா சாப்பாடு கொண்டு வந்த விஷயத்தை சொன்னவுடன் அவர் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா இருப்பது போலவே நினைத்து இருக்கிறார். எங்கு பார்த்தாலும் மீனா தெரிவது போலவே அவர் கண்ணுக்கு இருக்கிறது. அதற்கு பின் முத்து, மீனாவின் பூக்கடை பக்கமாக வருகிறார். அப்போது மீனாவின் தோழிகள் முத்துவை வம்பு இழுத்து பூ வாங்கும் இடத்தில் விட சொல்லி கேட்டதால் முத்துவுமே அவர்களை ஏற்றிக் கொண்டு செல்கிறார். அப்போது மீனாவின் தோழிகள், கணவன்- மனைவி இடையே சண்டை வருது சகஜம்தான். இருவரும் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், முத்து-மீனா இருவருமே பேசிக்கொள்ளவில்லை. இருவரும் மனதுக்குள் வருத்தப்பட்டார்கள்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மனோஜ், ரோகினி இருவருமே ஷோரூமில் இருக்கிறார்கள். அப்போது அங்கு கணவன் மனைவி இருவருமே வேலைக்கு கேட்டு வருகிறார்கள். மனோஜ், ஒருவருக்கு தான் வேலை இருக்கிறது என்று சொன்னவுடன் அந்தப் பெண் ரோகினியை பார்த்து ஐஸ் வைத்து பேசுகிறார். உடனே ரோகினி, வீட்டிற்கு சமையல் செய்ய ஆள் வேண்டும். அதனால் ரெண்டு பேரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.
அதற்கு பின்னர் ரோகினி, அந்த பெண்ணை வீட்டில் அழைத்து வந்த ரோகினி, மீனா வரும் வரை ராணி சமையல் செய்வார் என்றவுடன் விஜயாவும் சம்பாதிக்கிறார். பின் ராணி சமைக்க சொல்லி அனுப்புகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






