விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சுருதி, ரவி இருவரும் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வந்த மீனா, நீத்து ஹோட்டல் நிறுத்திவிட்டு பூக்கடையை ஆரம்பித்திருந்தார். அந்த கடைக்கு ரவியின் பெயரை வைத்திருந்தார். அந்த கடைக்கு சிந்தாமணி தான் எல்லா பூவெல்லாம் கொடுக்கிறார். இதனால் ஏதோ ஒரு பிரச்சனை செய்ய இருக்கிறார் என்றார். இதனால் சுருதி, ரவி இருவரும் கோவப்பட்டார்கள். ரவி, நான் அம்மாவிடம் சொல்லி சிந்தாமணியை அவர்கள் கடைக்கு பூ கொடுப்பதை நிறுத்த சொல்கிறேன் என்றார்.

விஜயாவை சந்தித்து, சுருதி- ரவி இருவரும் நீத்துவின் பூக்கடையை பற்றி பேசி இருந்தார்கள். விஜயா தனக்கு எதுவும் தெரியாது என்றார். ஸ்ருதி, இனிமேல் சிந்தாமணி எந்த உதவியும் செய்யக்கூடாது. சொல்லி வையுங்கள் என்றார். அதற்குப்பின் விஜயா, சிந்தாமணியை சந்தித்து பேசி இருந்தார். அப்போது சிந்தாமணி, நான் உங்கள் மகனின் வாழ்க்கையில் இருந்து நீத்துவை நீக்க தான் இப்படி எல்லாம் செய்கிறேன். கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கதை கட்டி விட்டு விட்டார். அதையும் விதையா நம்பி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் ஷோரூம் வந்த கிரிஷ், அப்பா ரேங்க் கார்டில் கையெழுத்து போடுங்கள் என்றார். கோபப்பட்டு மனோஜ், கிரிஷை அடிக்க போனார். அப்போது வந்த ரோகினி அழுது டிராமா எல்லாம் செய்து நடிக்கிறார். இதையெல்லாம் பார்த்த கஸ்டமர் மனோஜை திட்டிவிட்டு பொருட்களை வாங்காமல் அங்கிருந்து சென்றார்கள். இதனால் மனோஜ் ரொம்பவே கஷ்டப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த மனோஜ் நடந்தது எல்லாம் விஜயாவிடம் சொல்லி வருத்தப்பட்டார். அண்ணாமலை, மனோஜை தான் திட்டினார். அதற்குப்பின் சுருதி- ரவி இருவரும் சிந்தாமணி பற்றி கேட்டார்கள். விஜயா, சிந்தாமணி சொன்னதை சொல்கிறார். ஸ்ருதி கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனா, கிரிஷ் உடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த விஜயா கோபப்படுகிறார். பின் வீட்டிற்கு வந்து விஜயா, மீனா- கிருஷ் பேசுவதை சொல்லி கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். முத்து, மீனா- கிருஷ் பேசுவது பிரச்சனை இல்லை. மனோஜ் தன்னுடைய விவாகரத்து விஷயத்தில் சரியாக இருக்கணும். அவனுக்கு சொல்லி புரிய வையுங்கள். முதலில் அவனை குழம்பம் இல்லாமல் தெளிவாக பேச சொல்லுங்கள் என்று கிண்டல் அடிக்கிறார். அதற்குப்பின் மேனேஜர் தினேஷ், ரோகினியை சந்தித்து மிரட்டுகிறார். ரோகிணி, தன் குடும்பத்திற்கு உண்மை தெரிந்தது என்று சொல்லாமல் நடிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
தினேஷ், நீ பணம் கொடுக்கவில்லை என்றால் நான் முத்துவிடமே சொல்லுவேன் என்று மிரட்டுகிறார். ரோகினி, என்னிடம் பணம் இல்லை. ஆனால் யாரிடமும் சொல்லாதீர்கள். முத்துயிடம் சொல்ல வேண்டாம் என்றெல்லாம் நடிக்கிறார். கோபத்தில் தினேஷ் முத்துவிடம் சொல்வதற்காக கிளம்புகிறார். அதற்குப்பின் மனோஜ் பார்த்த பெண் சந்தியா வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் எல்லோரையும் அண்ணா என்று கூப்பிடுகிறார். மனோஜ் உள்ளுக்குள்ளே வேதனை தாங்க முடியாமல் குமறுகிறார். வீட்டில் எல்லோரிடமும் கலகலப்பாக சந்தியா பேசுகிறார்.






