விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தாலி செய்னுடன் சீதா வீட்டிற்கு போனார். அருண் மன்னிப்பு கேட்டார். உடனே சீதா, மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். டாக்டரை போய் பார்க்கலாம் என்றார். அருண், நான் பைத்தியமா? என்னுடைய வலி உனக்கு தெரியவில்லை. உன் அம்மா இறந்தால் அந்த வலி தெரியும் என்று ஒரு சைக்கோ மாதிரி பேசிக் கொண்டிருந்தார். சீதாவிற்கு ஒற்றுமை புரியவில்லை. பின் மனோஜ், யமுனா என்ற பெண்ணை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.

யமுனா, எனக்கு கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் தான் மாப்பிள்ளையின் அப்பா, அம்மா, மாப்பிள்ளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து இறந்து விட்டார்கள். இதனால் தான் என் கல்யாணம் நின்று போனது என்றார். இதனால் மனோஜ் அதிர்ச்சி அடைந்து உட்கார்ந்து விட்டார். பின் மனோஜ், வீட்டில் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் மீனா மீண்டும் வீட்டிற்கு வந்ததால் அண்ணாமலை தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லோரையும் அழைத்து விருந்து வைத்தார்.
சிறகடிக்க ஆசை:
இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கடுப்புதான் ஆனது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த போலீஸ், முத்து-மீனா செய்த செயலைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்கள். பின் இரண்டு கிராம் நகையையும் பரிசாக கொடுத்தார்கள். அதைப் பார்த்து விஜயா கோபப்பட்டார். பின் ரூமில் விஜயா, இதற்கெல்லாம் காரணம் ரோகினி தான். அவளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்றார். ரோகினிக்கு போன் செய்த மனோஜ், நான் உன்னிடம் பேச வேண்டும். நான் சொல்லும் இடத்திற்கு வா என்று கூப்பிட்டார். மனோஜ் சொன்னதால் ரோகிணியுமே ரொம்ப சந்தோஷமாக அந்த இடத்திற்கு கிளம்பினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஷோரூம்க்கு ரோகிணி வந்து விடுகிறார். ஆனால், அங்கு விஜயா- மனோஜ் இருக்கிறார்கள். விஜயாவை பார்த்தவுடன் ரோகினி ஷாக் ஆகிறார். பின் மனோஜின் நண்பர், ஏற்கனவே ரோகிணி ஏற்பாடு செய்த சாட்டையடிப்பவரை அழைத்துக் கொண்டு வருகிறார். அதை பார்த்து ரோகிணிக்கு ஒன்றுமே புரியவில்லை. விஜயா, சாமியாரை வைத்து என்னை முட்டாளாக்கி விட்டாய். அதற்கு பாடம் புகட்ட தான் அவரை வைத்தேன் என்று சொல்கிறார். பின் சாட்டையடிப்பவரை வைத்து ரோகினியை அடிக்க வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அவர் அடித்த அடியில் ரோகினி மயங்கி விழுகிறார். மனோஜ், தண்ணீரில் தெளித்து ரோகிணியை எழுப்புகிறார். ரோகினி, உன் அம்மா இதற்கான பதில் சொல்லனும். உங்க அம்மாவை சும்மா விடமாட்டேன் என்கிறார். அதற்குப்பின் ரோகினியை பார்க்க வந்த சிந்தாமணி, அந்த சாமியாரிடம் நான் தான் உன் பெயரை சொல்ல சொன்னேன். நானும் மாட்டி கொண்டால் விஜயாவின் திட்டத்தை கண்டுபிடிக்க முடியாது என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஸ்வேதா, ஸ்ருதி, மீனா, முத்து, ரவி எல்லோருமே ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த பெண்கள் பாதுகாப்பு அதிகாரி, ரோகினியை விஜயா கொடுமைப்படுத்தியதால் திட்டி கேள்வி கேட்கிறார்.






