விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரதி குடும்பத்தினர் மனோஜை அடித்து கட்டிப்போட்டு வைத்தார்கள். என்ன செய்வதென்றே புரியாமல் ரோகினி அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் மீனா சொன்ன இடத்திற்கு வந்த தீபன், முத்துவை அடி வெளுத்து வாங்கினார். அப்போது தீபன், நான் ரதியை உண்மையாக காதலிக்கிறேன். ஆனால், என்னுடைய வீட்டில் தான் ஒத்துக் கொள்ளவில்லை என்று சொன்னார். இதனால் முத்து, உன்னுடைய அப்பா- அம்மாவை ரதி வீட்டிற்கு வரச்சொல்லி நான் சொல்வதைப் போல் செய் என்று சொன்னார்.

முத்து-மீனா இருவருமே ரதியின் வீட்டிற்கு சென்று ரதி - தீபன் இருக்குடும்பத்தினரையும் பேச வைத்தார்கள். ஆனால், இருவருமே பயங்கரமாக சண்டை போட்டார்கள். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட முத்து, பேசி முடிவெடுக்கலாம் தேவையில்லாமல் சண்டை போட வேண்டாம் என்று சொன்னார். பின் தீபன்- ரதி இரு குடும்பமே பேசி இருவருக்குமே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள். அதற்குப்பின் ரதியின் பெற்றோர்கள், முத்துவிற்கு நன்றி சொல்லி மனோஜ் செய்த வேலையை சொன்னார்கள். பின் ரூமில் மனோஜை கட்டிப்போட்டு இருப்பதை பார்த்து முத்து கழட்டி விட்டார். அதோடு ரதி குடும்பத்திடம் மனோஜ் செய்த வேலைக்காக முத்து மன்னிப்பு கேட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் விஜயா என்ன நடக்குமோ என்ற கவலையில் இருந்தார். அந்த சமயம் வந்த முத்து, ரதி- தீபன் பிரச்சனை முடிந்தது. ரெண்டு வீட்டையும் வரவைத்து பேசி சமாதானம் செய்து விட்டோம் என்று சொன்னார். அதற்கு பின் அண்ணாமலை, எந்த வேலைக்கும் போக வேண்டும் என்று சொன்னார். உடனே விஜயா, என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது என்று சொன்னார். அதற்கு முத்து, மீனாவிடம் சென்று பூ கட்டுங்கள் என்று சொன்னவுடன் விஜயா மோசமாக பேசினார். அதற்குப்பின் மனோஜ், ரோகினிக்காக பிட்சா வாங்கி வந்தார். உடனே ரோகினி, கிரிஷை அழைத்து உட்கார வைத்து சாப்பிட வைத்தார்.

நேற்று எபிசோட்:
அதை பார்த்து மீனா அமைதியாக வந்து விட்டார். பின் முத்துவிடம் நடந்ததை மீனா சொன்னார். இதை எல்லாம் கேட்ட முத்து, பார்லர் அம்மா அந்த அளவுக்கு நல்லவர்கள் கிடையாது. காரியம் எதாவது இருக்கும். அவர் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறார் என்று சொன்னார். இதை எல்லாம் ஒளிந்து நின்ற ரோகினி கேட்டு ஷாக் ஆனார். இன்னொரு பக்கம் தீபன்- ரதி இரு குடும்பத்தாரின் ஆட்களுமே பார்வதியின் வீட்டிற்கு சென்றார்கள். அங்கு ரதி- தீபன் வீட்டில் இருப்பவர்கள், எங்கள் மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றார்கள். இதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் கிரிஷ் வீட்டில் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா, கிரிஷை ரொம்ப மோசமாக திட்டுகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே விஜயாவை திட்டுகிறார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்து பார்வதி, ரதி- தீபன் வீட்டில் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்கும் விஷயத்தை சொல்கிறார். இதனால் விஜயா ஷாக் ஆகிறார். உடனே முத்து, மனோஜ் செய்த வேலையால் தான் அவர்கள் பணம் கேட்கிறார்கள் என்று நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார். மனோஜால் தான் இந்த பிரச்சனை. அவர் தான் பணம் கொடுக்கணும் என்று சொல்கிறார். உடனே மனோஜ், ரோகினியால் தான் நான் அப்படி சொன்னேன் என்கிறார். அதற்கு விஜயா, நீதான் மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும்.

சீரியல் ட்ராக்:
நான் உன்னை மன்னிக்கணும் என்றால் அந்த பணத்தை கொடு என்று சொல்கிறார். ரோகினி முடியாது என்று சொல்லி விஜயா கேட்கவில்லை. அதற்குப்பின் மாடியில் மனோஜ், இந்த பிரச்சனையில் இருந்து எப்படியாவது காப்பாற்று. நீ சொல்வதை செய்கிறேன் என்று கேட்கிறார். முத்துவுமே சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் கிச்சனில் ரோகினி பணத்தை எப்படி வெளிப்படுவது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார். மீனா, ஸ்ருதி இருவருமே ரோகினி செய்த தவறை சொல்லி ஆறுதல் சொல்கிறார்கள். அந்த சமயம் வந்த விஜயா வழக்கம்போல் ரோகினி, மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






