விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, இந்த வீட்டின் முதுகெலும்பே மீனா. அவர் இல்லாததால் வீடு கலை இழந்து இருக்கிறது என்றார். விஜயா, மீனாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதற்குப்பின் முத்து, மீனாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது மீனா, ரோகிணி வந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இந்த சாமியார் விஷயத்தில் ரோகினியின் திட்டம் இருக்குமா என்று ஸ்ருதி சந்தேகப்படுகிறார் என்றார். முத்து, சாமியார் யார் என்பதை கண்டுபிடிக்கிறேன் என்றார்.

முத்து, மீனாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். மீனா முத்துவிற்காக பார்த்து பார்த்து சமைத்து வைத்தார். அப்போது வீட்டின் ஓனர், வாடகை 3000 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சொன்னார். முத்து, மீனா அம்மாவின் குடும்ப சூழ்நிலையை பற்றி எடுத்துச் சொல்லி புரிய வைத்து ஆயிரம் ரூபாய் குறைத்து விட்டார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் மனோஜ், ரவி இருவருமே வீட்டிற்கு வரவில்லை.
சிறகடிக்க ஆசை:
அண்ணாமலையும் தன்னுடைய நண்பரை வரவைத்து மாடியில் தூங்க சென்று விட்டார். விஜயா மட்டும் அந்த வீட்டில் தனியாக இருந்தார். தன் வீட்டில் சந்தோஷமாக இருந்த நினைவுகளை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் விஜயா. இன்னொரு பக்கம் மீனா, முத்து தன் குடும்பத்திற்கு சப்போர்ட் செய்ததை பற்றி பேசி கொண்டு இருந்தார். அப்போது தன் அம்மாவிற்காக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று மீனா செல்வதால் முத்து சம்மதித்தார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் பார்வதியின் வீட்டிற்கு சென்ற விஜயா, என்னால் நேத்து ஒரு நாள் தனிமையாக வீட்டில் இருக்க முடியவில்லை. யாரும் இல்லாததால் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. இப்போதுதான் உன்னுடைய நிலைமை புரிகிறது என்கிறார். பார்வதி, தன் நிலைமையை விஜயா புரிந்து கொண்டதால் சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் விஜயா, மனோஜ்க்கு திருமண ஏற்பாடு செய்வதற்காக தரகரை வரவைத்து பேசுகிறார். இன்னொரு பக்கம் மனோஜின் நண்பர் சந்தோஷ், ரோகினியை சந்தித்து உங்களை நான் காதலிக்கிறேன். இனிமேல் உங்களை மனோஜ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனுக்கு வேறு ஒரு பெண் பார்க்கிறார்கள். நான் உங்களை காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
ரோகினி, எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார். பின் அந்த இடத்தில் மனோஜ்- சந்தோஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை ரோகிணி பார்த்து விடுகிறார். இது மனோஜ் வேலை என்று புரிந்து கொண்ட ரோகிணி, மனோஜிற்கு பாடம் புகட்ட திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் மீனா வேலை செய்யும் இடத்தில் ஒரு மனநல பாதிக்கப்பட்ட பையன் தவறான முடிவு எடுக்க பார்க்கிறான். அந்த சமயம் மீனா புத்திசாலித்தனமாக யோசித்து அவனை காப்பாற்றுகிறார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் மீனாவை பாராட்டுகிறார்கள். அதற்குப்பின் முத்து, மீனா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்துட்டு வந்து எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டார். விஜயா- மனோஜ் இருவரும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். முத்து, ரவி, அண்ணாமலை எல்லோருமே ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.






