விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, மீனாவால் தான் இந்த பிரச்சனை என்று ஏற்றி விட்டார். இதனால் விஜயாவும் ரொம்பவே பதறுகிறார். பின் அண்ணாமலை கண்விழித்து விட்டார். அப்போது எல்லோருமே அண்ணாமலையை பார்த்து பேசி இருந்தார்கள். முத்து நடந்ததை சொன்னார். விஜயா, மீனாவின் மீது தான் கோபப்பட்டார். பின் அண்ணாமலையின் உடல் நிலைக்காக முத்து எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் அம்மாவிற்கு வீட்டிற்கு வந்த மீனா, நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனலாக கதறி அழுதார்.

அண்ணாமலையை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அண்ணாமலை, மீனா எங்கே? என்று கேட்டார். அம்மா வீட்டிற்கு சென்றதை விஜயா சொல்லி விட்டார். மீனா இங்கு வர கூடாது என்று விஜயா-மனோஜ் இருவரும் பிடிவாதமாக இருந்தார்கள். அண்ணாமலை, எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. அதற்குப்பின் முத்து, மீனாவை அழைப்பதற்காக வந்தார். மீனா, நான் வரவில்லை. என்னால் மாமாவுக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம்.
சிறகடிக்க ஆசை:
அத்தையின் பயம் போகட்டும். அதற்குப் பிறகு வீட்டிற்கு வருகிறேன் என்றார். அதனால் முத்து எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் அண்ணாமலையை பார்ப்பதற்காக ஸ்ருதி வீட்டிற்கு வந்தார். சுருதியை பார்த்தவுடன் விஜயாவிற்கு சந்தோசம். மீனா வீட்டில் இல்லாததை அறிந்த சுருதி மூடநம்பிக்கையில் இப்படி எல்லாம் நடந்து கொள்வதா? உங்கள் பயம் தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் என்றெல்லாம் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், விஜயா கேட்பதாகவே இல்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுருதி எவ்வளவு எடுத்து சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. கடைசியில் அங்கிருந்து ஸ்ருதி கிளம்பி விடுகிறார். அண்ணாமலை, முத்து விடம் மீனாவை அழைத்து வர சொல்கிறார். முத்து, அவளே வருவாள் என்று சொல்கிறார். அதற்குப்பின் வீட்டில் உள்ள கணவன்மார்கள் எல்லோருமே தங்களுடைய மனைவிகளை விட்டு பிரிந்து இருப்பதால் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவர் கண்ணுக்கு முன்பும் அவர்கள் மனைவி இருப்பது போல நினைத்து கவலைப்படுகிறார்கள்.
மீனாவும் முத்துவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் மீனாவை சந்தித்து சுருதி பேசுகிறார். மீனா, என்னால் மாமாவிற்கு எதுவும் ஆகக்கூடாது. அத்தையின் பயம் போகட்டும். அதற்கு பிறகு நான் வருகிறேன் என்கிறார். சுருதி, இத்தனை வருடமாக இல்லாமல் இப்போது ஏன்ஒரு சாமியாரை பார்க்கணும். இது உங்களை வீட்டை விட்டு அனுப்ப தான் திட்டம் போடுகிறார்கள். இதற்கெல்லாம் பின்னாடி ரோகிணி இருப்பாரோ? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்கிறார். மீனாவும் ஸ்ருதி சொல்வதை யோசித்துப் பார்க்கிறார். அந்த சமயம் பார்த்து ரோகினி அந்த இடத்திற்கு வருகிறார்.






