விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, அம்மன் வேஷம் போட்டு சொர்ணத்தின் வாயில் உண்மையை வர வைத்து விட்டார். இன்னொரு பக்கம் முத்துவின் வீட்டிற்கு மீனாவின் அம்மா தங்கை வந்து இருந்தார்கள். அப்போது முத்து-மீனா இருவரும் சொர்ணத்தை அலைத்துக் கொண்டு வந்தார்கள். விஜயா சாமியாரை பார்த்து கையெழுத்து கூப்பிட்டார். உடனே முத்து, நடந்ததை எல்லாம் சொன்னார். விஜயா ஷாக் ஆனார். சொர்ணமும் தான் போலி சாமியார் என்ற உண்மையை சொன்னார். கோபத்தில் விஜயா, சொர்ணத்தை அடித்து யார் இப்படி செய்ய சொன்னது என்றார். சொர்ணம், ரோகிணி சொல்லி தான் செய்தேன் என்றார். மனோஜ் அதிர்ச்சி அடைந்தார்.

சொர்ணம், எல்லாம் உண்மையும் சொன்னதால் விஜயா வாய் அடைத்துப் போனார். முத்து, போலீசுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். சொர்ணத்தை போலீஸ் கைது செய்து சென்றார்கள். அதற்கு பின் அண்ணாமலை, ரவி எல்லோருமே விஜயாவின் மூடநம்பிக்கையை திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் முத்து, மீனாவை வெளியே போ என்று சொன்னார். விஜயாவை ஆரத்தி எடுத்து மீனாவை உள்ளே வர வைக்க சொன்னார் முத்து. விஜயா அமைதியாக இருக்கிறார் அண்ணாமலை சொன்னதால் வேறு வழி இல்லாமல் விஜயா, மீனாவிற்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்.
சிறகடிக்க ஆசை:
இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கடுப்பானது. இன்னொரு பக்கம் தாலி செய்னுடன் சீதா வீட்டிற்கு போனார். அருண் மன்னிப்பு கேட்டார். உடனே சீதா, மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். டாக்டரை போய் பார்க்கலாம் என்றார். அருண், நான் பைத்தியமா? என்னுடைய வலி உனக்கு தெரியவில்லை. உன் அம்மா இறந்தால் அந்த வலி தெரியும் என்று ஒரு சைக்கோ மாதிரி பேசிக் கொண்டிருந்தார். சீதாவிற்கு ஒற்றுமை புரியவில்லை. பின் மனோஜ், யமுனா என்ற பெண்ணை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் யமுனா, எனக்கு கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் தான் மாப்பிள்ளையின் அப்பா, அம்மா, மாப்பிள்ளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து இறந்து விடுகிறார்கள். இதனால் தான் என் கல்யாணம் நின்று போனது என்கிறார். இதனால் மனோஜ் அதிர்ச்சி அடைந்து உட்கார்ந்து விடுகிறார். பின் மனோஜ், வீட்டில் பேசிவிட்டு சொல்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் மீனா மீண்டும் வீட்டிற்கு வந்ததால் அண்ணாமலை தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லோரையும் அழைத்து விருந்து வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கடுப்புதான் ஆகிறது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த போலீஸ், முத்து-மீனா செய்த செயலைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். பின் இரண்டு கிராம் நகையையும் பரிசாக கொடுக்கிறார்கள். அதைப் பார்த்து விஜயா கோபப்படுகிறார். பின் ரூமில் விஜயா, இதற்கெல்லாம் காரணம் ரோகினி தான். அவளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று சொல்கிறார். ரோகினிக்கு போன் செய்த மனோஜ், நான் உன்னிடம் பேச வேண்டும். நான் சொல்லும் இடத்திற்கு வா என்று கூப்பிடுகிறார். மனோஜ் சொன்னதால் ரோகிணியுமே ரொம்ப சந்தோஷமாக அந்த இடத்திற்கு கிளம்புகிறார்.






