சிவகாசி படத்தில் விஜய் தங்கச்சியா நடித்த இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா ? இப்போ எப்படி இருகாங்க பாருங்க.

0
1579
sivagasi
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகை வெண்பாவிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-41.jpg

நடிகர் விஜய் நிறைய தங்கை சென்டிமென்ட் படத்தில் நடித்திருக்கிறார்.அப்படியான படங்களில் மிகவும் முக்கியமான படம் பேரரசு இயக்கிய சிவகாசி படம் .அந்த படத்தில் தங்கைகாண சென்டிமென்ட் மிகவும் ஆழமாக இருக்கும். இந்த படத்தில் விஜய்யின் சிறு வயது தங்கையாக நடித்து இருந்தார் வெண்பா . சிவகாசி படத்தில் நடிகை செம்பா மற்றும் விஜய் குடும்பத்துடன் இருப்பது போல சிறுவயதுபோட்டோ ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கும். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : உன் படத்த பாத்து காச வேஸ்ட் பண்ணனுமா ? தன் படத்தை கேலி செய்தவருக்கு சாந்தனு கொடுத்த பதில்.

- Advertisement -

அதே போல 2007-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘கற்றது தமிழ்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ராம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் கருணாஸ், அழகம் பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் அஞ்சலி நடித்த கேரக்டரின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை வெண்பா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘பள்ளிப் பருவத்திலே’.

venba

இதில் நடிகை வெண்பா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் இயக்கியிருந்தார். ‘பள்ளிப் பருவத்திலே’ படத்துக்கு பிறகு ‘காதல் கசக்குதய்யா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் வெண்பா. கடைசியாக நடிகை வெண்பா நடிப்பில் வெளி வந்த படம் ‘மாயநதி’. இந்த படத்தினை அசோக் தியாகராஜன் இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement