விபத்தில் இறந்த கணவர், வாழ்வாதத்திற்கு செருப்பு தைத்து வரும் விஜய், ரஜினி பட நடிகை – நிஜத்தில் ஒரு இந்தியன் மனோரம்மா. மனதை உருக்கும் வீடியோ.

0
442
kaatamma
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் உடன் நடித்த நடிகை தற்போது செருப்பு தைத்து வாழ்கை நடத்தும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் சிறு வேடங்களில் நடித்த நடிகர்களுக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் சில நடிகர்கள் தான் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் ரஜினி, விஜய்யின் படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் நடிகை காட்டம்மா. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சிவாஜி.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, மணிவண்ணன், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. மேலும், படத்தில் ரவுடிகள் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் போது ரஜினி, விவேக் அவர்களுக்கு பணம் கொடுக்க வருவார்கள். அப்போது அங்கு ரவுடியின் பக்கத்தில் ஒரு பெண்மணி காப்பி ஆத்தி கொண்டு ரஜினியிடம் பேசுவார். அவர் தான் காட்டம்மா.

- Advertisement -

இதையும் பாருங்க : வெளிநாட்டில் சூர்யா, கார்த்தி பட நடிகையுடன் Golf விளையாடிய சத்குரு. வைரலாகும் வீடியோ (மனுஷன் வாழறாருபா )

இவர் விஜயின் சிவகாசி படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு இவர் வேறு எந்த படத்திலும் காணவில்லை. தற்போது இவர் செருப்பு தைத்து தன்னுடைய பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரை சமீபத்தில் பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது. அதில் அவர் கூறியிருப்பது, என் பெயர் காட்டம்மா. நான் செருப்பு தைக்கும் தொழில் செய்து தான் என்னுடைய பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

-விளம்பரம்-

எனக்கு என்று யாரும் இல்லை. எனக்காக இருந்த ஒரே ஜீவன் என்னுடைய கணவன். அவரும் இறந்துவிட்டார். என் வீட்டுக்காரர் செருப்பு தைக்கும் தொழில் செய்தவர் தான். அவர் ஒரு நாள் இதே இடத்தில் உட்கார்ந்து செருப்பு தைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு கார் பிளாட்பார்மில் மேலேறி வந்து அவர் மீது மோதி விட்டது. அப்படியே அவரை அல்லி கொண்டு மருத்துவமனைக்கு போனோம். ஒரு நாள் மட்டும் தான் இருந்தார்.

அவர் அநியாயமாக அடுத்த நாள் இறந்து விட்டார். அவருடைய நினைவாக தான் நான் செருப்பு தைத்து என் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று குடும்பம் வந்துவிட்டது. யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகத்தான் நான் இந்த தொழிலை செய்கிறேன். நான் ரஜினி, விஜய் படங்களில் நடித்திருக்கிறேன்.

அதெல்லாம் என்னால் மறக்க முடியாது. அதற்கு பிறகு பெரிதாக எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பூக்கட்டி, செருப்பு தைத்து தொழில் செய்து வருகிறேன் என்று பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படி இவர் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து இவருக்கு யாராவது உதவி செய்கிறார்களா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement