அந்நாட்டு மேயராக இருந்தது ரெண்டு பேர் – ஒன்று தி Great நேருஜி, இன்னொன்று இந்த Poor சிவாஜி – வைரலாகும் சிவாஜியின் வீடியோ.

0
2220
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4-வது மகனாக விழுப்புரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி. இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார். பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிவாஜி என்பது நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது.

- Advertisement -

மேலும், தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். கடைசியாக இவர் நடித்த படம் படையப்பா. இவருடைய மகன் பிரபு. இவர் தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவரை தொடர்ந்து இவருடைய மகன் விக்ரம் பிரபு. தற்போது விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பெயரும் புகழும் சம்பாதித்த சிவாஜி அவர்கள் தன்னுடைய 71 வயதில் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இறந்தார். சிவாஜி கணேசன் இவ்வுலகை விட்டு போனாலும் யார் மனதை விட்டும் நீங்கவில்லை. இன்றும் அவருடைய பெருமைகள் பேசப்பட்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இன்று சிவாஜி கணேசனின் 21 வது நினைவு நாள்.
இதனால் சோசியல் மீடியாவில் சிவாஜி கணேசனின் புகைப்படங்களை பதிவிட்டு பலருமே அவருடைய நினைவு நாள் குறித்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சிவாஜி கணேசனின் பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு முறை ஆங்கில நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜி கணேசன் பங்கேற்றுகிறார். அப்போது அவரிடம், நீங்கள் இந்தியனாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு சிவாஜி கணேசன், ஆமாம் 200 சதவீதம் நான் இந்தியன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். ஏன் இப்படி கேட்டீங்க? நான் இந்தியனாக பிறந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்தியா ஒரு சிறந்த நாடு. நையாக்ராசிட்டி மேயர் இந்தியாவிலிருந்து இதுவரை இரண்டு பேரை தான் அழைத்து இருக்கிறார்கள். ஒன்று நேருஜி, இன்னொன்று இந்த புவர் சிவாஜி. அது மட்டும் இல்லாமல் அவர்கள் எனக்கு தங்க சாவி ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் செய்ததற்கு காரணம் நான் இந்தியன் என்பதினால் தான் என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

Advertisement