அண்ணா, கலைஞர் என்று எல்லா பெரியார் தாக்கம் உள்ள பகுத்தறிவார்கள்கள் எல்லாம் சேர்ந்து சிவாஜிக்கு அந்த மலைல கல்யாணம் பண்ணி வச்சாங்க – சிவகுமார் சொன்ன சுவாரசியம்.

0
644
sivaji
- Advertisement -

வெறும் 500 ரூபாயில் சிவாஜி கணேசன் திருமணம் நடந்தது என்று நடிகர் சிவகுமார் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் விழுப்புரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி. இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில்நடித்து இருக்கிறார். அதிலும் தமிழ் மொழியில் மட்டும் சிவாஜி அவர்கள் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிவாஜி என்பது நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன்.

- Advertisement -

இதையும் பாருங்க : வடிவேலு எனக்கு உதவி செய்யலனாலும் – சிகிச்சை பின் போண்டா மணி அளித்த பேட்டி.

சிவாஜி திரைப்பயணம்:

இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். கடைசியாக இவர் நடித்த படம் படையப்பா. இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை என்றுதான் சொல்லணும். இதனிடையே இவர் கமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். அதில் இவருடைய மகன் பிரபு.

-விளம்பரம்-

சிவாஜி குடும்பம்:

இவர் தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரை தொடர்ந்து இவருடைய மகன் விக்ரம் பிரபு. தற்போது விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகுமார் அளித்த பேட்டி:

இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் திருமணம் குறித்து சிவகுமார் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் சிவகுமார் அவர்கள் சிவாஜி திருமணம் குறித்து கூறியிருந்தது, அந்த காலத்திலேயே நடிகர்களுக்கு பெண் கொடுக்கக் கூடாது என்ற வழக்கம் இருந்தது தான். அதனால் தான் ஒண்ணு விட்ட சொந்தத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் கமலா அம்மாவை திருமணம் செய்து கொண்டார்.

சிவாஜி திருமணம் குறித்து சொன்னது:

அப்போது பெரியார், அண்ணா, கலைஞர், கண்ணதாசன், எம்ஜி ஆர் போன்ற பகுத்தறிவாளர்கள் முன்னிலையில் சிவாஜி உடைய திருமணம் சுவாமி மலையில் நடந்தது. கண்ணதாசன் திருக்குறள் கூறி தாலியை எடுத்துக் கொடுக்க சிவாஜி கணேசன் தாலி கட்டினார். எம்ஜிஆர் வேட்டியை மடித்துக் கொண்டு பந்தி பரிமாறி இருந்தார். வெறும் 500 ரூபாயில் அவருடைய திருமணம் முடிந்தது என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement