சிவகார்த்திகேயன் தன்னுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன் குடும்பம்:
இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மூன்றாவது மகனுக்கு காதணி விழா நடத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய மாமன் மகள் ஆர்த்தியை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை முதலில் பிறந்தது. அதற்குப் பிறகு இவர்களுக்கு குகன் தாஸ் என்ற மகன் பிறந்தார்.

சிவகார்த்திகேயன் குலதெய்வம்:
கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு மூன்றாவது ஆக மீண்டும் மகன் பிறந்திருக்கிறார். அவருக்கு பவன் என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று இருக்கிறார்.

காதணி விழா:
இந்த மகா மாரியம்மன் என்ற குலதெய்வ கோவிலில் சிவகார்த்திகேயன் தன்னுடைய உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் தன்னுடைய மூணாவது மகனுக்கு காதணி விழா நடத்தி இருக்கிறார். இந்த கோயிலில் சிவகார்த்திகேயனை காண மக்களின் கூட்டமும் கூடி இருந்தது. தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சிவா அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:
இந்த படத்தை Dawn Pictures and Red Giant Movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.






