எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர் , தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். முதலில் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் டாக்டர். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் டான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். டாக்டர் படத்தின் கதாநாயகி பிரியாங்கா அருள்மோகன் தான் இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13ஆம் தேதி வர உள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து உள்ள படங்கள்:
இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் தான் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படங்கள்:
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி பிசியான நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
சீமராஜா படம்:
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சீமராஜா படம் குறித்த பேட்டி. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் “சீமராஜா” . இதில் சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் பேட்டியில் கூறி இருந்தது,
சீமராஜா படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறியது:
என் திரைப்பயணத்தில் கலவையான விமர்சனங்கள் பெற்ற பல படங்கள் இருக்கிறது. அதில் ஒன்று சீமராஜா. இந்த படம் பல பேருக்கு பிடிக்கவில்லை என்றும் சொன்னார்கள். மொத்தமாகவே தமிழ்நாட்டில் 25 கோடி வசூல் செய்திருந்தது . ஆனால், விருது விழா ஒன்றில் என் மகளுக்கு நான் நடித்ததிலேயே பிடித்த படம் எது என்று கேட்டதற்கு சீமராஜா என்று கூறி இருந்தார். இந்த படம் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். பாப்பா உனக்கு பிடித்திருக்கிறதா! அதுவே எனக்கு போதும் என்று கூறினார். இப்படி சீமராஜா படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.